2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நீரின்றி அவதியுறும் ஹிஜ்ரத் கிராம மக்கள்

Editorial   / 2018 ஜூன் 01 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, பொத்துவில் ஹிஜ்ரத் நகர் கிராமத்தில் வாழும் மக்கள் குடிநீரின்றி பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

பொத்துவில் நகரிலிருந்து சுமார் 10 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள இக் கிராமத்தில், சுமார் 30 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு குடிநீரோ மற்றும் பாவனைக்கான நீரோ இல்லாமையின் காரணமாக இவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர் என, தெரிவிக்கப்படுகிறது.

மக்களின் அன்றாடப் பயன்பாட்டுக்காக, பொத்துவில் பிரதேச சபையினால் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்ற போதிலும், அவை பாவனைக்கு போதாதென, குறித்த கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே இதற்கு உரிய தீர்வை வழங்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ. வாசித்துடன் தொடர்புக் கொண்டு வினவிய போது,

 

 

 

ஹிஜ்ரத் நகர் கிராமத்தில் வாழும் மக்களுக்கு ஒரு நாள் விட்டு ஒருநாள் பௌசர் மூலம் நீர் வழங்கப்பட்டு வருவதாகவும், தற்போது ரமழான் மாதம் ஆகையால் வழங்கப்படும் நீர் போதுமானதாகவில்லையென மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவர்களுக்கு மேலதிகமாக நீர் வழங்குவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இக் கிராமத்தில் நிலவும் நீர்ப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு நிரந்தர தீர்வு முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X