2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பயங்கரவாதத்தை முறியடிக்கும் வேலைத்திட்டம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 மே 13 , பி.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயங்கரவாதத்தை முறியடிக்க, சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை இணைத்துக் கொண்டு, கிராம மட்ட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.  

பயங்கரவாதத்தைத் தோற்கடித்தல், தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புதல், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் என்ற நோக்கங்களை அடையும் நோக்குடன், சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை இணைத்துக் கொண்டுள்ள தமது கிராம மட்ட வேலைத் திட்டம், ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

இது தொடர்பாக, ஜே.வி.பியின் பிரசாரச் செயலாளர் விஜித ஹேரத் கருத்துத் தெரிவிக்கையில்,  

கிராம மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தத் தேசியத் திட்டம், நாடு பூராகவும் வினைத்திறனுள்ளதாக விஸ்தரிக்கப்படும் என்றும் கண்டி, களுத்துறை, கேகாலை, கொழும்பு, இரத்தினபுரி, மொனராகலை, கம்பஹா, புத்தளம், பதுளை, காலி, குருநாகல் என்று, இத்திட்டம் விழிப்பூட்டலுக்காக விஸ்தரித்து, நாடுபூராகவும் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்தார். 

இவ்வேலைத் திட்டத்தின் கீழ், இனக்கலவரங்கள் தூண்டி விடப்பட்டு நடத்தப்படுவதைத் தடுப்பதற்கும் பொதுமக்களது உடமைகளைப் பாதுகாப்பதற்குமான கட்டமைப்பு, அனைத்து இன மக்களிடையேயும் உருவாக்கப்டும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.  

ஏற்கெனவே, பயங்கரவாதத்துக்கு எதிரான வினைத்திறனுள்ள வேலைத் திட்டம், முஸ்லிம் அமைப்புக்களுடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதேபோன்று பௌத்த, கத்தோலிக்க, இந்து மத அமைப்புக்களுடனும், எதிர்வரும் நாட்களில் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .