2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 ஜூலை 10 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம் என்பது பிரதேச மக்களின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக நிறைவேற்றும் இடமாகுமென அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரும், சுகாதார பிரதியமைச்சருமான பைசால் காசிம் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இன்று(10) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்களை மக்கள் முன்கொண்டு செல்வதற்கு இவ்வாறான பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் மிகவும் பெறுமதி வாய்ததொன்றாகும். இதனை கட்சி பேதங்களுக்கு அப்பால் நாம் எல்லோரும் ஒன்றினைந்து நிறைவேற்ற வேண்டும்.

மக்களின் பிரதிநிதிகளினூடாக இங்கு முன்வைக்கப்படும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு அரச அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் அபிவிருத்தி திட்டங்கள் சரியான முறையில் மக்களிடம் சென்றடையக் கூடிய வகையில் அதிகாரிகள் செயற்பட வேண்டும்.

வெறுமெனே மாதத்திற்கு ஒரு முறை கூட்டப்படும் இக் கூட்டங்கள் மக்களுக்கு பயணளிக்காமல் செல்லுமேயானால் அவை பயனற்றதாகிவிடும்.

எனவே, அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை அதிகாரிகள் நிறைவேற்ற வேண்டுமென்றார்.

இக்  கூட்டத்தில், அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர், பிரதேச செயலாளர், உதவித் தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .