2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

புதிய பயிலுனர்களுக்கான பாடநெறிகள் ஆரம்பம்

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2018 ஜூலை 11 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தின் இந்த ஆண்டுக்கான இரண்டாம் தொகுதி பயிலுனர்களுக்கான புதிய பாடநெறிகள் இன்று(11) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

பயிற்சி நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம்.ஏ.லத்தீப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், போதனாசிரியர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள்  எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.

ஏற்கனவே விண்ணப்பித்து, பதிவு செய்து கொண்ட சுமார் 150 இளைஞர், யுவதிகள் இதன்போது, பயிற்சி நெறிகளில் இணைத்து கொள்ளப்பட்டார்கள்.

இங்கு ஆங்கிலம், சிங்களம் (சான்றிதழ்) , சிங்களம் (டிப்ளோமா) தகவல் தொழிநுட்பம், தொலைபேசி திருத்துதல், நீர் குழாய் திருத்துதல் உள்ளிட்ட பாட நெறிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதுவரையில், விண்ணப்பிக்காதவர்கள்,இப்பயிற்சி நெறிகளில் இணைந்து கொள்ள விருமவுவோர், உடனடியாக பயிற்சி நிலையத்திற்கு வந்து பதிவு செய்து கொள்ளுமாறு,ம் மேலதிக தகவல்களுக்கு : 0776655606, 0672225406 எனும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம் என்றும் பயிற்சி நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம்.ஏ.லத்தீப் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .