2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘பெரும்போக விதைப்புப் பணிகளை முன்னெடுக்கவும்’

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2017 ஒக்டோபர் 12 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்கரைப்பற்று பிராந்திய நீர்ப்பாசன பிரிவுக்குட்பட்ட நெற்காணிகளில், எதிர்வரும் நவம்பர் 1ஆம் திகதி முதல் டிசெம்பர் 1ஆம் திகதி வரை பெரும்போக விதைப்புப் பணிகளை முன்னெடுக்குமாறு, பொறியியலாளர் ரீ. மயூரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆற்றுப் பாய்ச்சலுக்குட்பட்ட நெற்காணிகளில் இம்மாதம் 15ஆம் திகதி முதல் விதைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டும். குளத்து நீர்ப்பாசனத்துக்குட்பட்ட நெற்காணிகளிலேயே, நவம்பர் முதலாம் திகதி முதல் அனுமதியிக்கப்பட்டுள்ளதாக, அவர் கூறினார்.

இம்முறை பெரும் போகத்தில் அக்கரைப்பற்று பிராந்திய நீர்பாசனப் பிரிவிலுள்ள 04ஆம் பிரிவுகளில் மொத்தம் 30 ஆயிரம் ஏக்கர் காணிகளில் நெற்செய்கையும் 4,900 ஏக்கரில் கரும்பும் செய்கையும் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதன்பிரகாரம் அக்கரைப்பற்று நீர்பாசன பரிவில் 8,200 ஏக்கரிலும். இலுக்குச்சேனை நிர்ப்பாசனப் பிரிவ்ல 11,600 ஏக்கரிலும், தீகவாபி பிரிவில் 9,600 ஏக்கரிலும் வீரையடி பிரிவில் 5,500 ஏக்கரிலும் நெற்செய்கை மேற்கொள்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இம்முறை அம்பாறை டீ.எஸ். சேனநாயக்க நீர்ப்பாசன குளத்தில் போதுமான நீர் இல்லாத காரணத்தால் மழை வீழ்ச்சியை நம்பியே செய்கைக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 07 இலட்சத்து 70 ஏக்கர் அடி கொள்ளளவுடைய அம்பாறை டீ.எஸ். சேனநாயக்க நீர்ப்பாசன குளத்தில் தற்போது 58 ஆயிரம் ஏக்கர் அடி நீர் உள்ளது.

குளத்து நீரின் கொள்ளளவு 02 இலட்சத்து 40 ஆயிரம் ஏக்கரடியாக உயர்ந்தால் மாத்திரமே குளத்திலிருந்து நீர்ப்பாசனம் வழங்க முடியும் எனவும் பொறியியலாளர் ரீ. மயூரன் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X