2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

போசாக்கு குறைபாட்டால் கல்வியறிவில் வீழ்ச்சி

Editorial   / 2018 ஜனவரி 28 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-துஷாரா

2018 ஆண்டின் தேசிய உணவு ஊக்குவிப்பும், உணவும் போசாக்கு வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நிந்தவூர்பாடசாலை மாணவர்களுக்காக நடாத்தப்பட்ட இலவச மருத்துவ பரிசோதனையில் கற்றல் செயற்பாடுகளில் ஆர்வம் குறைந்த 75 மாணவர்களில் 25 மாணவர்கள் மிகவும் போசாக்கு குறைந்தவர்களாகவும், கல்வியறிவு மற்றும் நாளாந்த செயற்பாடுகளில் ஆர்வம் குறைந்தவர்களாகவும் அடையாளம் காணப்பட்டனர் என, நிந்தவூர் அரசாங்க ஆயுர்வேததொற்றாநோய் ஆராச்சி வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே.எல்.எம்.நக்பர் இன்று (28) தெரிவித்தார்.

தேசிய உணவு ஊக்குவிப்பும், உணவும் போசாக்கு வளர்ச்சியும் சம்பந்தமான முதலாவது விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டத்தை நேற்றைய தினம் (27) நிந்தவூர் ஜேர்மன் நட்புரவு பாடசாலை கூட்ட மண்டபத்தில் நடாத்தியபோது குறிப்பிட்ட மாணவர்கள் கண்டறியப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார் 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த மருத்துவ பரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்ட 25 மாணவர்களும் தொடர்ச்சியாக 6 மாத காலங்களுக்கு போசாக்கு நிறைந்த மருந்துகளையும், உணவுகளையும் உட்கொள்ளவேண்டும் என்ற அறிவுரைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன், அம்மாணவர்களுக்கான 6 மாதகாலம் போசாக்கு நிறைந்த மருந்து வகைகளை இலவசமாக வழங்கி வைப்பதற்கான சகல ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
     
தேசிய ரீதியாக பாடசாலை மாணவர்களுக்கு இந்த போசாக்கு ஊக்குவிப்புத் திட்டத்தை முன்னெடுக்கும் அதேவேளை விழிப்புணர்வு கருத்தரங்குகளையும் நடாத்தி அம்மாணவர்களுக்காக இலவச மருத்துவ பரிசோதனைகளையும் நடாத்தி வருகின்றோம். 
     
இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்களை அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை கல்வி வலயத்துக்குட்டப்பட்ட தழிழ், முஸ்லிம், சிங்களம் உள்ளிட்ட 14 பாடசாலைகளில் மேற்கொள்ள இருப்பதுடன்,இதுதவிர கர்ப்பினித் தாய்மார்களுக்காக 10 தேசிய நிகழ்ச்சித் திட்டங்களும், நடமாடும் இலவச 10 மருத்துவ சேவைகளும் விசேட மருத்துவ அதிகாரிகளைக் கொண்டு நிந்தவூர் அரசாங்க ஆயுர்வேத தொற்றாநோய் ஆராச்சி வைத்தியசாலையினால் 2018 ஆண்டு காலப் பகுதியில் முன்னெடுக்கப்பட இருக்கின்றது.
      
சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிமின் பணிப்புரைக்கமைவாகவும், ஆலோசனைக்கு அமைவாகவும் ஆயுர்வேத திணைக்களத்தின் அனுசரனையின் கீழ் நிந்தவூர் அரசாங்க ஆயுர்வேத தொற்றாநோய் ஆராச்சி வைத்தியசாலை 2018 ஆண்டு தேசிய ரீதியாக பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கு ஊக்குவிப்புத் திட்டத்தை கொண்டு செல்லல்வேண்டும் என்பதற்காக இத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றதாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .