2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மர்மக் காய்ச்சல் கட்டுப்பாட்டில்

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2018 ஜனவரி 03 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் பரவிய மர்மக் காய்ச்சல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக, ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எல்.எம்.இஸ்மாயில் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில், அண்மையில் சுமார்  5 மரணங்கள் ஏற்பட்டதுடன், 10க்கும் அதிகமானவர்கள், திடீர் மர்மக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தனர்.

“மர்மக் காய்ச்சல், மரணங்களுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. எனினும், 'மலோடிஅசீஸ்' பக்ரீரியா தொற்றுக்காய்ச்சலாக இருக்கலாமெனச் சந்தேகிக்கப்படுகின்றது

“குறித்த காய்ச்சல், புளுதி மணல் கலந்த காற்றைச் சுவாசிப்பதால் தொற்றுவதற்கான சாத்தியங்கள் அதிகமாகவுள்ளன. இது தொடர்பில் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .