2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மாயாக்கல்லிமலை விகாரை நிர்மாணப் பணிகளை இடைநிறுத்த தீர்மானம்

Editorial   / 2018 செப்டெம்பர் 12 , பி.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

றியாஸ் ஆதம், -ரீ.கே.றஹ்மத்துல்லா

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் கட்சியின் உயர்மட்ட குழுவினர் எதிர்வரும் புதன்கிழமை(19) ஜனாதிபதியை சந்தித்து மாயாக்கல்லி பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள விகாரை தொடர்பான அபிவிருத்திப் பணிகள் பற்றி பேசவுள்ளதனால், மாயாக்கல்லிமலை விகாரை நிர்மாணப்பனிகளை இடைநிறுத்துவதென இறக்காமம் பிரதேச ஓருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இறக்காமம் பிரதேச ஓருங்கணைப்புக் குழுக்கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், பொறியியலாளர் எஸ்.ஐ.மன்சூர், எம்.ஏ.ஹசன் அலி ஆகியோரின் இணைத்தலைமையில் நேற்று (11) இறக்காமம் பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

இதன்போது, அம்பாறை மாவட்ட ஓருங்கணைப்புக் குழுவின் இணைத்தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம், இறக்காமம் பிரதேச சபையின் தவிசாளர் உள்ளிட்ட பிரதேச சபை உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கு துறைசார்ந்த திணைக்களத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தும், அவர்கள் சமூகமளிக்காததினால் முக்கிய பல பிரச்சினைகளுக்கு தீர்வுகான முடியாதுள்ளதாகவும், குறித்த திணைக்களத் தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு சம்மந்தப்பட்ட அமைச்சுக்கள், திணைக்களங்களுக்கு அறிவிப்பதெனவும் இக்கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், எதிர்வரும் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டங்களுக்கு அரச சுற்று நிருபத்திற்கமைய துறைசார்ந்த முக்கிய அதிகாரிகளை மாத்திரம் அழைப்பதெனவும், இக்கூட்டத்தின் போது தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .