2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

முதலாவது பேராசிரியராக கலாநிதி ஜௌபர் நியமனம்

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2019 பெப்ரவரி 11 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் முதலாவது பேராசிரியராக, அட்டாளைச்சேனையைச் சேர்ந்த கலாநிதி அபூபக்கர் ஜௌபர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனத்தை, பல்கலைக்கழகக் கவுன்ஸிலின் தலைவரும், தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தருமான பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம், 2016 செப்டம்பர் மாதம் செயற்படத்தக்கதாக வழங்கியுள்ளார்.

பேராதனைப் பல்கலைக்கழக விஞ்ஞானப் பட்டதாரியும் முதுமாணிப் பட்டதாரியுமான பேராசிரியர் ஜௌபர், தனது கலாநிதி பட்டப்படிப்பை சீனாவின் சியாமன் பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்தார்.

இலங்கை, இந்தியா, வியட்னாம் ஆகிய நாடுகளில் தொழில்சார் டிப்ளோமாக் கற்கை நெறிகளையும் அவர் பூர்த்தி செய்துள்ளார்.

பேராதனைப் பல்கலைக்கழகம், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் என்பனவற்றில் 24 வருடங்கள் சேவையை நிறைவு செய்துள்ள பேராசிரியர் ஜௌபர், அதிகமான நாடுகளில் ஆய்வுக் கட்டுரைகளையும் புத்தகங்களையும் சமர்ப்பித்து, தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .