2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

முன்னாள் போராளிகளால் மாவீரர் துயிலும் இல்லம் சிரமதானம்

எஸ்.கார்த்திகேசு   / 2017 செப்டெம்பர் 09 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் கஞ்சிகுடிச்சாறு பிரதேசத்தில் அமைந்துள்ள மாவீரர்களின் துயிலும் இல்லம், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் முன்னாள் போராளிகளால் இன்று (09 சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

மட்டு./அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த ஜனநாயகப் போராளிகள் கட்சியின் இணைப்பாளர்களான கே.பிரபாகரன் மற்றும் எஸ்.சுதாகரன் ஆகியோரின் தலைமையில் இச்சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன், முன்னாள் போராளிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அம்பாறை மாவட்ட  ஜனநாயகக் கட்சியின் இணைப்பாளர் எஸ்.சுதாகரன்,

“கடந்த 1993ஆம் ஆண்டு தொடக்கம் 2006ஆம் ஆண்டு வரை இம்மாவீரர்கள் துயிலும் இல்லத்தில் தீபம் ஏற்றி நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வந்த நிலையில், 2006ஆம் ஆண்டுடன் இங்கு உயிர் நீத்த மாவீர்களுக்கு நினைவேந்தல்கள் இடம்பெறவில்லை.

“அந்தவகையில் இம்முறை கஞ்சிகுடிச்சாறு மாவீரர்கள் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டுள்ள சுமார் 700 மாவீர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளோம். அதனடிப்படையில் இன்று முன்னாள் போராளிகள் ஆகிய நாங்கள் ஒன்றினைந்து எமது மாவீர்களின் துயிலும் இல்லத்தை துப்பரவு செய்து வருகின்றோம்” எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .