2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு ஆதரவு

Editorial   / 2018 மே 11 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்   

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு ஆதரவு தெரிவிப்பதாக, அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் தெரிவித்துள்ளது.

திருக்கோவில் மணிக்கூட்டு கோபுர சந்தியில் இன்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அச்சங்கத்தின் தலைவி அ.செல்வராணி இவ்வாறு கூறினார்.

எதிர்வரும் 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில், பல்கலைக்கழக மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள நினைவேந்தல் நிகழ்வுக்கு தங்களது பூரண ஆதரவை தெரிவிப்பதுடன், தாம் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளதாகவும், குறிப்பிட்டார்.

கடந்த அரசினால் மேற்கொள்ளப்பட்ட முள்ளிவாய்க்கால் போன்ற படுகொலை துயர சம்பங்கள், இனிமேல் இலங்கையில் எப்பாகத்திலும் எந்த இனத்தவருக்கும் நடைபெறக்கூடாது எனவும், அவர் வலியுறுத்தினார். 

குருதியால்  சிவந்த மண்ணாக மாற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலை  தமது மனங்களில் பதிந்து விட்டதாகவும், இது போன்ற வடுக்கள் இனிவரும் சந்ததியின் காலங்களில் நடைபெற்று அவர்களது மனங்களை பாதிக்காத வண்ணம் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X