2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘மு.கா.வுக்கு வாக்குகள் அளிக்கப்பட்டால் சாய்ந்தமருதில் தனி உள்ளூராட்சி’

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2018 ஜனவரி 09 , பி.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

“சாய்ந்தமருது பிரதேசத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு பத்தாயிரம் வாக்குகள் அளிக்கப்படுமானால், அக்கட்சியின் ஊடாக நான் முன்னின்று, தனிப் பிரதேச செயலகத்தைப் பெற்றுத்தந்ததைப் போன்று தனி உள்ளூராட்சி மன்றத்தையும் பெற்றுத்தருவேன்” என, கல்முனை பிரதேச சபை முன்னாள் உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருது பிரதேசத்துக்கான தேர்தல் செயற்பாட்டுக் குழுவின் தலைவருமான ஏ.எல்.எம்.றசீட் புர்கான் தெரிவித்தார்.  

கல்முனை மாநகர சபைத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிடும் சாய்ந்தமருது பிரதேச வேட்பாளர்களை ஆதரித்து, நேற்று இரவு நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.  

20ஆம் வட்டார வேட்பாளர் ஏ.நஸார்தீன் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில், புர்கான் மேலும் தெரிவிக்கையில்,  

“சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி மன்றத்தின் அவசியத்தை நான் உள்ளிட்ட குழுவினரே, கடந்த 1988ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் முன்வைத்து வலியுறுத்தி வந்தோம். அதன் ஒரு முன்னேற்பாடாகவே மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் மூலம் பிரதேச செயலகத்தைப் பெற்றுத் தந்தோம். 

“இங்கு சுயேட்சை குழு வெல்வதால் எதையும் சாதித்து விட முடியாது. தேவையானால் சிலர், கல்முனை மாநகர சபை அங்கத்தவராகச் செல்ல முடியுமே தவிர, ஒருபோதும் இலக்கை அடைந்து கொள்ள முடியாது.  

“ஆகையால், இந்தப் பள்ளிவாசல் நிர்வாகத்தை உடனடியாகக் கலைத்து, ஜனநாயகமான முறையில் மக்களது நேரடியான கண்காணிப்பில் புதிய சபை ஒன்றை உருவாக்க வேண்டும். அந்தச் சபையில் துறை சார்ந்தவர்கள் உள்வாங்கப்பட்டு, அவர்களின் ஊடாக இப்பிரதேசம் முன்னேற்றம் அடைய வேண்டும்” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .