2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

விவசாயம், மீன்பிடி நடவடிக்கைகள் முன்னெடுப்பு

Editorial   / 2020 மார்ச் 25 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாறுக் ஷிஹான்

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் அம்பாறை மாவட்டத்தில் மீன்பிடி மற்றும் விவசாயிகள் வழமைப்போன்று தத்தமது வாழ்வாதார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில், பெரிய நீலாவணை முதல் அட்டாளைச் சேனை வரையான கடற்கரைப் பகுதியில், கரைவலை மீன்பிடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், ஆழ்கடல் மீன்பிடி மீனவர்கள் அதிகளவான மீன்களை பிடித்துள்ளனர்.

இவ்வாறு பிடிக்கப்பட்ட மீன்களை உள்ளூரில் விற்பனை செய்து வருவதாகவும் மிஞ்சிய மீன்களை வெளிமாவட்டத்துக்கு கூலர் வாகத்தில் ஏற்றி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் இதற்காக, ​பொலிஸ் அனுமதி பெறப்பட்டுள்ளது.

அத்துடன், இடைபோக விவசாய நடவடிக்கை, அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு, நிந்தவூர், சம்மாந்துறை, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்று வருகின்றது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய, விவசாயிகள் பாதுகாப்பாக வயல் நிலங்களுக்குச் சென்று வருவதற்கு, பாதுகாப்புத் தரப்பினர் அனுமதி வழங்கியுள்ளனர். அத்துடன், பிரதேசங்களில் பொதுமக்களின் அன்றாடத் தேவைகளுக்கு உகந்த அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டுசெல்ல பொலிஸாரின் அனுமதிகளை, அந்தந்த பிரதேச செயலகங்கள், பொலஸாரின் உதவியுடன் முன்னெடுத்து வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .