2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘விஜயதாசவின் பேச்சு கண்டிக்கத்தக்கது’

Editorial   / 2018 ஜூன் 11 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எம். இர்சாத்

“தென்கிழக்குப் பல்கலைக்கழகம் தொடர்பான விஜயதாசவின் பேச்சு கண்டிக்கத்தக்கது” என, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேலைவாய்ப்புச் செயளாளரும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான  ஏ.எல். தவம் தெரிவித்தார்.

அக்கரைப்பற்றில் நேற்று (10) மாலை இடம்பெற்ற இப்த்தார் நிகழ்வில் உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,

“தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சில சிரேஷ்ட விரிவுரையாளர்கள், சிறந்த பெறுபேறுகளை வழங்க பெண் மாணவிகளிடம் பாலியல் இலஞ்சம் பெறுவதாக, உயர் கல்வியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.

“இவ்வாறான புகார்கள், தென்கிழக்குப் பல்கலைக் கழகத்திலிருந்து மட்டுமே இதுவரையிலும் எழுந்துள்ளதைப் போன்று அவர் பேசியுள்ளமை உள்நோக்கம் கொண்டதாகும்.

“தென்கிழக்குப் பல்கலைக் கழகம் என்பது ஒரு நிறுவனம். அதன் கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகள் தொடர்பில் கண்மூடித்தனமாக பொறுப்பற்று இவ்வாறு அமைச்சர் நடந்துகொள்ள முடியாது.

“இது நமது தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விடயமாகும். இது கண்டிக்கப்பட வேண்டும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .