2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞானப் பீடத்துக்கான மாணவர் விடுதி நிர்மாண பணிகள் அடுத்த வர

Super User   / 2010 டிசெம்பர் 18 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

சம்மாந்துறையில் அமைந்துள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞானப் பீடத்துக்கான மாணவர் விடுதி மற்றும் பணியாளர் குடியிருப்பு கட்டிடத்தொகுதி ஆகியவற்றுக்கான நிர்மாண பணிகள் 112.5 மில்லியன் ரூபாய் செலவில் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக உயர் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

குவைத் அரசின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்;படவுள்ள பிரயோக விஞ்ஞானப் பீடத்திற்கான மூன்று மாடி விடுதிக்கட்டிடம்;,  பணியாளர் குடியிருப்புக்கான இரண்டு மாடிக்கட்டிடம் மற்றும் இயைபான அடிப்படை வசதிகள் என்பன இக்கட்டிடத் தொகுதியில் அமையவுள்ளது.

இதற்கான நிலம் சம்மாந்துறை தொழிநுட்பக் கல்லூரிக்கு எதிரில் ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரயோக விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்றுவரும் 100ற்கும் மேற்பட்ட வெளியூர் மாணவர்கள் தனியார் வீடுகளில் தங்கி வருவதால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.

இதனால், பிரயோக விஞ்ஞானப் பீட மாணவர்கள் நிரந்தர விடுதி வழங்கப்பட வேண்டும் என கடந்த காலங்களில் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .