2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

அக்கரைப்பற்று முதல் மேயராக சக்கி அதாவுல்லா நியமனம்

Super User   / 2011 மார்ச் 29 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

அக்கரைப்பற்று மாநகர சபையின் முதல் மேயராக உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவின் புதல்வரான சக்கி அதாவுல்லா  நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நியமன தெரிவை தேசிய காங்கிரஸின் தலைவரும் செயலாளருமான அமைச்சர் அதாவுல்லா மேற்கொண்டுள்ளார்.
 
அக்கரைப்பற்று மாநகர சபை தேர்தலில் தேசிய காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட சக்கி அதாவுல்லா 7,900க்கு மேற்பட்ட அதிகூடிய வாக்குளை பெற்றார்.

தற்போது சக்கி அதாவுல்லா, உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவின் அந்தரங்க செயலாளராக செயற்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இத்தேர்தலில் தேசிய காங்கிரஸ் சார்பாக இரண்டாவது அதிகூடிய வாக்குகளை பெற்ற முஹம்மட் றிஸான்,  பிரதி மேயராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அக்கரைப்பற்று பிரதேச சபை மாநகர சபையாக கடந்த ஜனவரி மாதம் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சினால் தரமுயர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • Mr.X Wednesday, 30 March 2011 03:39 AM

    எங்கே சூப்பர் மூன் அன்று ஒன்றும் நிகழவில்லை என்று பார்த்தல்இ இதோ மிகப்பெரிய அனர்த்தம் அக்கரைபற்றில் நிகழ்ந்துள்ளது.

    Reply : 0       0

    ameer Wednesday, 30 March 2011 02:08 PM

    மாநகரசபை அல்ல மகன் நகரசபை

    Reply : 0       0

    hoh Wednesday, 30 March 2011 05:10 PM

    குதிரை எல்லாம் அக்கரைப்பற்று.

    Reply : 0       0

    Anvar Khan, Akkaraipattu Wednesday, 30 March 2011 05:43 PM

    அக்கரைப்பற்றினை இறைவன்தான் காப்பாற்ற வேண்டும்.

    Reply : 0       0

    abdul mohamed Thursday, 31 March 2011 12:32 AM

    ஏன், அக்கரைபற்றை இறைவன் காப்பாற்றி வருவதை இவர்கள் சிலர் விளங்க மறுப்பது தான் பெரிய விந்தை

    Reply : 0       0

    ANS Thursday, 31 March 2011 02:44 PM

    தேர்தல் வெல்லுதோ இல்லையோ அதாவுல்லா பரம்பரை வெற்றி பெறும்

    Reply : 0       0

    SM Tuesday, 05 April 2011 12:22 AM

    ஐசிசி உலக கிண்ண இறுதி ஆட்டம் அக்கரைப்பற்றில் நடந்து ரன் ஐ அம்பாறை இல் எண்ணி இருந்தால் இலங்கைக்கு வெற்றி கிட்டி இருக்கும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .