2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சூழல் நிர்மாண நிகழ்ச்சி திட்டம் பிரதேச சபையால் பொறுப்பேற்கப்படும்

Kogilavani   / 2011 ஏப்ரல் 10 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

அட்டாளைச்சேனை பிரதேசத்துக்குட்பட்ட அஷ்ரப் நகரில் ஐரோப்பிய ஒன்றியம் - அம்பாறை பங்காளிக் கூட்டமைப்பினால் அமைக்கப்பட்டுள்ள சூழல் நிர்மாண நிகழ்ச்சித் திட்டம் மிக விரைவில் அட்டாளைச்சேனை பிரதேச சபையால் உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்கப்படும் என்று அச் சபையின் புதிய தவிசாளர் ஏ.எல்.எம். நசீர் தெரிவித்தார்.

குறித்த சூழல் நிர்மாண நிகழ்ச்சித் திட்டத்தினை சென்று பார்வையிட்ட பின்னர் தவிசாளர் நசீர் இவ்விடயம் குறித்து மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்தார்.

இந் நிகழ்ச்சித் திட்டத்தின் வேலைகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள போதிலும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் சார்பில் கையேற்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இத் திட்டத்தின் கீழ் கல்முனை, சம்மாந்துறை, காரைதீவு, நிந்தவூர் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேசங்களில் சேகரிக்கப்படும் கழிவு மற்றும் குப்பைகள் பொறியியல் முறைமையுடன் இங்கு குவிக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, இந்தக் குப்பைகளிலுள்ள அசுத்த நீர் பிரித்தெடுக்கப்பட்டு  இயற்கைப் பொறி முறைகளினூடாகச் சுத்திகரிக்கப்படுகின்றது.

இவ்வாறு சுத்திகரிக்கப்படும் நீரானது - நீர் வாழ் உயிரினங்கள் வசிக்கத் தக்கனவாக இருப்பதாகவும், இந்த நீரைப் பெற்று வளரும் பயிர்கள் அமோக விளைச்சலினைக் கொடுப்பதாகவும் அங்குள்ள பணியாளரொருவர் தெரிவித்தார்.

இந்த இடத்தில் நாளொன்றுக்கு சுமார் 50 ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான குப்பை மற்றும் கழிவுகள் குவிக்கப்பட்டு வருகின்றன.

சுமார் 20 வருடங்களைக் கொண்ட இந்த நிகழச்சித் திட்டத்தின் மூலம், பலர் வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வதோடு, அட்டாளைச்சேனைப் பிரதேச சபைக்கும் பெருந் தொகையான வருமானம் கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .