2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சபையின் பொதுக்கூட்டத்தில் அங்கீகாரம் பெறாமல் கடைகளுக்கான கேள்வி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது: அக்க

Super User   / 2011 ஒக்டோபர் 21 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

கேள்வி அறிவித்தலொன்றை பத்திரிகையில் விளம்பரம் செய்வதற்கு முன்னர், அது தொடர்பில் மாநகரசபையின் பொதுக் கூட்டத்தில் தெரியப்படுத்தி, அதற்கான அங்கீகாரம் பெறப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்த நடைமுறை பின்பற்றப்படாமல் இறைச்சிக்கடை உள்ளிட்ட சில விடயங்களுக்கான கேள்வி அறிவித்தலை அக்கரைப்பற்று மாநகரசபையினர் பத்திரிகைகளில் பிரசுரித்துள்ளனர். இது பிழையானதொரு நடைமுறையாகும். இதைப் பார்த்துக் கொண்டு எங்களால் மௌனிகளாக இருக்க முடியாது. இந்த செயற்பாடுகளின் பின்னால் யார் உள்ளார் என்று நாம் நன்றாக அறிவோம் என அக்கரைப்பற்று மாநகரசபையின் ஆளும் தேசிய காங்கிரஸ் உறுப்பினரும், அக்கரைப்பற்று பிரதேசசபையின் முன்னாள் தவிசாளருமான ஏ.எல். தவம் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று மாநகரசபையிலுள்ள பிரதிநிதியொருவர் எவர் எதைப் பேசினாலும் அதற்கு எதிர்க்கதை பேசிக் கொண்டேயிருக்கின்றார். குறிப்பாக, சபையின் எதிர்க்கட்சித் தலைவர் பேசுகின்றபோது அதை எதிர்ப்பதே குறித்த நபருக்கு வேலையாகிப் போய்விட்டது என்றும் உறுப்பினர் தவம் மேலும் கூறினார்.

அக்கரைப்பற்று மாநகரசபையின் விசேட கூட்டமொன்று மாநகரசபையின் கூட்ட மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை மாநகரசபை முதல்வரின் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது அமைச்சர் அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாநகரசபை உறுப்பினர் ஏ.எல். தவம் மாநகரசபையால் பத்திரிகைளில் வெளியிடப்பட்டுள்ள கேள்வி அறிவித்தலில் பின்பற்றப்பட்டிருக்கும் நடைமுறைகளிலுள்ள குறைபாடுகள் குறித்து உரையாற்றிக் கொண்டிருந்த போது, மாநகரசபையின் ஆளும் தேசிய காங்கிரசின் மற்றொரு உறுப்பினரான எம்.எஸ். சபீஸ் தொடர்ந்து குறுக்கீடு செய்து கொண்டிருந்தார்.

இதன்போது ஆளும் தரப்பு உறுப்பினர்களான தவம் மற்றும் சபீஸ் ஆகியோருக்கிடையில் மிகக் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றதோடு, கடுஞ்சொற்களும் பிரயோகிக்கப்பட்டன.

இந்த நிலையிலேயே உறுப்பினர் ஏ.எல். தவம் மேற்கண்ட விடயங்களைக் கூறினார். அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,

'இந்த சபையை சரியாக வழிநடத்த வேண்டும். பிழையொன்றினை யார் செய்யதாலும் பிழை என்பது பிழையாகவே கருதப்படும்;. கேள்வி அறிவித்தல் தொடர்பில் கடந்த 7 ஆம் திகதி மாநகரசபையின் நிதிக் குழுவினர் கூடி தீர்மானமொன்றினை எடுத்ததாகச் சொல்லப்படுகிறது. அப்படியென்றால் அதனைத் தொடர்ந்து வந்த 10 ஆம் திகதி மாநகரசபையின் பிரதிநிதிகளின் மாதாந்தக் கூட்டம் நடைபெற்றதல்லவா? அந்தக் கூட்டத்தில்; கேள்வி அறிவித்தல் தொடர்பில் நிதிக் குழுவினர் மேற்கொண்ட தீர்மானம் குறித்து எமக்கு அறிவித்திருக்கலாம்தானே! அதை நீங்கள் செய்யாமல், இந்தச் சபையிலுள்ள மக்கள் பிரதிநிதிகளுக்குத் தெரியப்படுத்தாமல் கேள்வி அறிவித்தலை பத்திரிகைகளில் பிரசுரித்துள்ளீர்கள்.

நீங்கள் விரும்பியவாறெல்லாம் இந்த சபையினை வழிநடத்த முடியாது. மாநகரசபையொன்றினை எவ்வாறு கொண்டு செல்ல வேண்டுமென்று சட்ட திட்டம் உள்ளது. அதற்கிணங்கவே இச்சபை செயற்பட வேண்டும். இந்தக் கேள்வி அறிவித்தல் கோரப்பட்டுள்ள முறையினைப் பார்க்கும் போது, சபை சரியாக வழிநடத்தப்படவில்லை என்று தெளிவாகப் புரிகிறது. குறித்த கேள்வி கோரப்பட்டு அதைப் பத்திரிகையில் வெளியிடுவதற்கு முன்னர் அவ்விடயத்தை இந்த சபைக்குக் கொண்டு வரவில்லை என்பது சரியா? பிழையா? என்பதை முதலில் தீர்மானியுங்கள்!

அக்கரைப்பற்று மாநகரசபையினைப் பாரமெடுக்கும் போது, இங்கு வெளிப்படையான நல்லாட்சி இடம்பெறும் என்று கூறப்பட்டது. ஆனால், இப்போது நடக்கும் விடயங்களைப் பார்க்கும் போது எல்லாம் மூடிய கதவுகளுக்குள்தான் இடம்பெறுகின்றன போலுள்ளது.

இந்த கேள்வி கோருதல் மூலம் நீங்கள் களவு செய்துள்ளீர்களா, இல்லையா என்று நான் விவாதிக்க வரவில்லை. ஆனால், இந்த சபைக்கென்று ஒரு நடைமுறையுள்ளது. அந்த நடைமுறையானது குறித்த கேள்வி கோரலில் பின்பற்றப்படவில்லை என்பதே எனது வாதமாகும்.

ஆனால், இந்த விடயங்களை நான் கூறும் போது, இச் சiயிலுள்ள பிரதிநிதியொருவர் தொடர்ந்து இடையூறுகளை ஏற்படுத்துகிறார். மனநிலை சரியில்லாதவராக இருக்கின்றார். இந்த சபையில் எவர் எதைப் பேசினாலும் அதற்கு எதிர்க்கதை பேசிக்கொண்டேயிருக்கிறார். குறிப்பாக, சபையின் எதிர்க்கட்சித் தலைவர் பேசுகின்றபோது அதை எதிர்ப்பதே குறித்த நபருக்கு வேலையாகிப் போய்விட்டது' என்றார்.

ஆளுங்கட்சி  உறுப்பினர் எம்.எஸ். சபீஸ்:

அக்கரைப்பற்று மாநகரசபையின் ஆளும் தேசிய காங்கிரஸின் உறுப்பினரும், அக்கரைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளருமான சபீஸ் இதன் போது கூறியதாவது:

'இங்குள்ள உறுப்பினர் தவம் என்பவர் அக்கரைப்பற்றின் கடந்த பிரதேச சபையில் தவிசாளராக இருந்தவர். அவர் பதவி வகித்த காலத்தில் நிதி விடயங்களில் நடந்து கொண்ட விதமானது மிகவும் அநீதியானதாகும்.

இப்படியான ஒருவர் - இந்த சபையில் கேள்வி கோரல் முறை சரியாக இடம்பெறவில்லை என்று கூறுவதானது வேடிக்கையானதொரு விடயமாகும்.

மேலும், இவர் கடந்த முறை தவிசாளராக இருந்தவர், இம்முறையும் மாநகரசசபையின் முதவராக வேண்டும் என கனவு கண்டார். அது பலிக்கவில்லை. அதனால், மன ரீதியாக இவர்தான் குழம்பிப் போயுள்ளார். ஆனால், துரதிஷ்டவசமாக மற்றவர்களைப் பார்த்து மனநிலை சரியில்லாதவர்கள் எனப் புலம்புகிறார்' என்றார்.

அக்கரைப்பற்று மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவர் அஷ்ஷேய்க் எஸ்.எல்.எம். ஹனீபா மதனி :

இந்த காரசாரமான வாதப் பிரதிவாதங்களின் பின்னர் அக்கரைப்பற்று மாநகரச சபையின் மு.காங்கிரஸ் சார்பான எதிர்க்கட்சித் தலைவரும் மார்க்க அறிஞருமான அஷ்ஷேய்க் எஸ்.எல்.எம். ஹனீபா மதனி சபையில் உரையாற்றுகையில் கூறியதாவது:

'மாநகரசபையின் நிதிக் குழுவிலே ஒரு முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. அதேவேளை, அந்த முடிவு தொடர்பில் இந்த சபையிலே சில திருத்த யோசனைகள் முன் வைக்கப்படுகின்றன. இந்த நிலையில், குறித்த திருத்த யோசனைகள் இந்த சபைக்கு நன்மைகளையும், லாபங்களையும் வழங்குமானால் அவற்றினைப் பெரு மனங்கொண்டு ஏற்றுக் கொள்ளுதலே சிறப்பாகும்.

ஒரு உள்ளுராட்சி சபையிலே ஏகமனதாக ஒரு முடிவு எடுக்கப்பட்டாலும் கூட, அந்த முடிவானது உள்ளுராட்சி சபைச் சட்ட திட்டங்களுக்கு விரோதமாக இருக்குமாயின் - குறித்த முடிவானது பிழையானதாகவே கருதப்படும்.

இந்த சபையிலுள்ள அமைச்சர் அதாஉல்லாவின் ஆளும் தேசிய காங்கிரசினைப் பிரதிநிதித்துவப் படுத்தும் இரண்டு அங்கத்தவர்கள் மிகவும் கொடூரமான முறையில் வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட்டனர். இப்படி நடந்து கொள்ளத் தேவையில்லை.

அண்மையில் இப்படித்தான் - முல்லேரியா பகுதியில் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களிடையே ஏற்பட்ட மன முரண்பாடான விடயம்தான். இறுதியில் உயிர்ப் பலிகளில் முடிந்தது. இவ்விவகாரம் ஜனாதிபதியையே தலை குனிய வைக்கும் படியாக மாறியுள்ளதையும் நாம் காண்கின்றோம்.

எனவே, குறித்த கேள்வி கோரல் விடயத்தில் ஏதாவது திருத்தங்களை இந்த சபையினர் முன்வைத்தால் அதை ஏற்றுக் கொள்வதில் எதுவும் குறைந்து போவதில்லை. அதற்குரிய மனத் தன்மையினை நாங்கள் வளர்த்துக் கொள்தல் வேண்டும்.

மாற்றுக் கருத்துக்கள் முன்வைக்கப்படும் போது, அதற்காக விவாதித்து, கோபப்படும் போது – அது இறுதியில் ஒரு மோசமான உச்சக்கட்டத்திலேயே நிறைவடையும்.

ஒரு கேள்வி அறிவித்தலை சபையின் அனுமதியின்றி பத்திரிகையில் விளம்பரப்படுத்திய பிறகு, அந்த கேள்வி கோரல் தொடர்பான விடயத்தினை சபைக்குக் கொண்டு வருவந்தால் எதிர்காலத்திலும் இவ்வாறான சிக்கல்களும், சர்ச்சைகளும் ஏற்படத்தான் போகின்றன. எனவே, முன்கூட்டியே கேள்வி கோரல் விடயங்களை சபைக்குச் சமர்ப்பித்து, அதன் மீது முன்வைக்கப்படும் திருத்த யோசனைகளைக் கவனத்திற் கொண்ட பின்னர் - கேள்வி அறிவித்தல்களை பத்திரிகைகளில் விளம்பரம் செய்வதே சிறந்த செயற்பாடாக அமையும். 


You May Also Like

  Comments - 0

  • razeek sh Saturday, 22 October 2011 06:13 AM

    தவம் நீங்கள் என்ன பேசினாலும் எடுபடாது என்பது இன்னுமா உங்களுக்கு புரியவில்லை? குடும்ப ஆட்சி முடியும்போது உண்மை ஊருக்கு புரியும்.

    Reply : 0       0

    akkarai pattan Saturday, 22 October 2011 05:38 PM

    முதலில் சமூகத்த பாருங்கோ, அப்புறம் சண்ட பிடிங்கோ, தவம் அண்ட் சபீஸ் அவர்களே..

    Reply : 0       0

    faizmohamed Saturday, 22 October 2011 06:35 PM

    தவமின் கருத்து 100 வீதம் unmai.

    Reply : 0       0

    SIRAJ Saturday, 22 October 2011 07:04 PM

    உள்வீட்டுப் பிரச்சனை முச்சந்திக்கு வந்துள்ளது. எங்களுக்கு தெரியும் இப்படி வரும் என்று. ஏன்னா குதிரை கட்சிதானே. குதிரையை மாநகர சபையில் வைத்தால் என்ன நடக்கும் என்று விரிவாக சொல்ல தேவை இல்லை. தவம் தவமாக இருந்திருந்தால் இன்று மேயராக வந்திருக்கலாம். ஆனால் ....

    Reply : 0       0

    Doc - KSA Saturday, 22 October 2011 08:50 PM

    Time to time, we have urged all muslims to elect intellectuals who can serve the community in all ways to avoid unnecessary issues. But our community still ignore it. All blames should be beared by those who elected. We are in twenty first century and we need more leadership development to guide our citizen. I suggest to awake all senior muslim intellectuals for betterment s of community.

    Reply : 0       0

    razmin Saturday, 22 October 2011 09:04 PM

    ippothuthan

    Reply : 0       0

    Ramzeen Sunday, 23 October 2011 02:32 AM

    ஹனிபா மதனி சிறந்த எதிர்க்கட்சி தலைவர் என்பதை எடுத்துக் காட்டியுள்ளார்.

    Reply : 0       0

    alilanka Sunday, 23 October 2011 12:15 PM

    தவம் அவர்களுக்கு அன்பான வேண்டுகோள். நீங்கள் ஆட்சி செய்து முடிந்து விட்டது. ஆகவே நீங்கள் பொருத்து இருங்கள். இப்ப தான் ஆறு மாதம் ஏன் அவசரப்படுகிறீர்கள்.

    Reply : 0       0

    fasmin Sunday, 23 October 2011 03:38 PM

    இது நல்ல ஆட்சியை அவமதிப்பது.

    Reply : 0       0

    சிறாஜ் Sunday, 23 October 2011 09:21 PM

    எது நல்ல ஆட்சி, அங்க நிறைய தண்னி கிடைக்குமாம். அப்படின்னா நல்ல ஆட்சிதான் என்ன தம்பிமாரே? ஹனிபா மதனி சூப்பர் மேன்.

    Reply : 0       0

    Nusky Sunday, 23 October 2011 09:24 PM

    அடுத்த முறை மதனியை மேயர் ஆகினால் அது நல்லாரிக்குமே...அவர் உங்களை விட நல்ல யோசனையாக சொல்றாரே.......

    Reply : 0       0

    ali Monday, 24 October 2011 01:16 AM

    நுஷ்க்கி, அக்கரைப்பத்தில் எவ்வளவு அபிவிருத்தி நடந்து இருக்கு என்று உங்களுக்கு தெரியாத ? இன்னும் எவ்வளவு நடக்க போகுது தெரியுமா?

    Reply : 0       0

    uooran Thursday, 27 October 2011 05:32 PM

    ஆச்சரியம்! ஆச்சரியம்!
    குதிரைக்குள்ளும் குழப்பமா? குதிரைத்தலைவர் அடிக்கடி சொல்லுவர் அவர்ர ஊர் பண்பட்ட மக்கள் உள்ள ஊர் என. அவர்ர கட்சி குறுந் தலைவர்களுக்கு இடையிலும் போட்டியா? அப்போ அவர்ர கட்சிக்குள்ளும் வெடிப்பு உளுந்துட்டு போல.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .