2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

ஹரீஸ் எம்.பிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தல்

Super User   / 2011 ஒக்டோபர் 22 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளுமாறு  கட்சி தலைவர் ரவூப் ஹக்கீமிடம் அக்கட்சியின் அதியுயர் பீட உறுப்பினரான சட்டத்தரணி ஏ.எம்.பாயிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பிலான கடிதமொன்றை சட்டத்தரணி பாயிஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கு ஒக்டோபர் 20ஆம் திகதி அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதத்தில், "ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக கல்முனை மாநகர சபை தேர்தலில் போட்டியிட்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பாருக்கு ஆதரவு வழங்க கல்முனைக்கு சென்ற போது, நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸினால் கல்முனை அல் - சுஹரா வித்தியாலயத்திற்கு அருகில் அச்சுறுத்தப்பட்டேன்.

அச்சந்தர்ப்பத்தில் முறையற்ற வார்த்தைகளினால் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அச்சுறுத்தியதுடன் நான் அவரின் கோட்டையான கல்முனையில் இருப்பதால் அவர் நினைத்தால் எதையும் எனக்கு செய்ய முடியும் என அச்சுறுத்தினார்.

இதற்கு கல்முனை அல் - சுஹரா வித்தியாலயத்தில் வாக்களித்து விட்டு வந்த பொதுமக்கள் சாட்சியாக உள்ளனர். அத்துடன் அவர் என்னை அச்சுறுத்திய பின்னர், நான் அச்சுறுத்தியதாக கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் மூலம் அறிய முடிந்தது.

எனவே, இவ்வாறு கட்சியின் ஒழுக்கங்களை நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் மீறுவது தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்குமாறும் வேண்டிக்கொள்கிறேன்  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..   

இக்கடித்தின் பிரதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொது செயலாளர் எம்.ரி.ஹசன் அலிக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் 8ஆம் திகதி நடைபெற்ற கல்முனை மாநகர சபை தேர்தல் தினத்தன்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸை சட்டத்தரணி பாயிஸ் அச்சுறுத்தியதாகவும் சட்டத்தரணி பாயிஸை நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அச்சுறுத்தியதாகவும் இரு முறைப்பாடுகள் கல்முனை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி:

ஹரீஸ் அச்சுறுத்தினார் : பாயிஸ் புகார்;  பாயிஸ் அச்சுறுத்தினார் : ஹரீஸ் எம்.பி. புகார்


You May Also Like

  Comments - 0

  • hameed Monday, 24 October 2011 02:38 AM

    ரசீக், சில நேரம் பல்லு புடுங்கின பாம்பாககூட இருக்கலாம். எத்தனை .... காலம் தான் ஏமாற்றுவார் இந்த ஊரிலே .. இன்னும் எத்தனை காலம் தான் ...?

    Reply : 0       0

    iqbal Sunday, 23 October 2011 09:45 PM

    ஹரிஸ் எம் பி சென்ற தேர்தலில் நடு நிலையை வகிக்க வேண்டியவர் ஒரு பக்கம் சாய்ந்ததால் வந்த வினைதான் பாருங்கோ?

    Reply : 0       0

    nanpan Sunday, 23 October 2011 09:48 PM

    அன்பிற்குரிய மீனவன் அவர்களே, நாம் எல்லோரும் சாதாரண மனிதர்கள்தான் அல்லாஹ்வின் முன்னிலையில், யாரையும் உயர்த்தியோ, தாழ்த்தியோ பேசவேண்டாம். பட்டம், பதவிகளுடன் மரணித்தவர்கள் யாரும் இருந்தால் உங்களால் காட்ட முடிமா?
    அல்லாஹ் உங்களுக்கு நல்ல இஸ்லாமிய சிந்தனயைத்தருவானாக் ஆமீன்.

    Reply : 0       0

    Nafar Sunday, 23 October 2011 09:55 PM

    எல்லோரும் ஒன்றை விளங்கி கொள்ளுங்கள் கல்முனையில் மரத்தில் யாரை கட்டி போட்டாலும் அவர்தான் வெல்வார். அது கல்முனையின் தலைவிதி.

    Reply : 0       0

    sajath Sunday, 23 October 2011 10:26 PM

    ஹா ஹா ! அரசியல் எண்டா தந்திரம்தான் அது உண்மையிலே எம். பி இடம் உள்ளது ... அவர எம். பி ஆக்குறது இறைவன் ..ஏன் என்றால் ஒவ்வொரு நாளும் இம்மக்களால் அவர் நோகடிக்கப்பட்டும் இறைவன் வெற்றியை இவருக்கு கொடுக்கிறான் ...பொறமை படாமல் பொருந்திக் கொள்ளுங்கள்.

    Reply : 0       0

    kalmunaiyan Sunday, 23 October 2011 10:50 PM

    ஹலோ ... ஹரிஸ் சார் ரே வைத்து காமெடி கிமடி ஒனும் பநேலேயே ?
    நல்ல சொநிகோ போங்கே ... கல்முனை நிலவரம் இப்ப நிசம்ட கியிலே ..

    Reply : 0       0

    Nusky Monday, 24 October 2011 12:44 AM

    மரத்தில் யார் வந்தாலும் வெற்றிபருவார்கள் என்பது பழைய கதை.. கல்முனை மக்களை யாரும் ஏமாற்ற முடியாது.. இந்த தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் வெல்லவில்லை..மாறாக சாய்ந்தமருதில் பிரதேச வாதமும் கல்முனையில் SLMC சின் தலைமையை மாற்றும் ஒரு புதிய முயற்சியும்தான் அரங்கேறி உள்ளது. இனி மரத்தில் யாரு காசோடு ஏறுவாரோ அவர்தான் வெல்ல முடியும்.

    Reply : 0       0

    razeek kalmunai Monday, 24 October 2011 01:05 AM

    ஹமீது, சார பாம்புட புத்து மாதிரிதான் விளங்கும் உள்ளுக்கு நல்ல பாம்பு இருக்கிறது.

    Reply : 0       0

    ruzny Monday, 24 October 2011 01:53 AM

    அரசியல விட்டு, சோத்த போடுங்க சாப்பிடுவோம் . இன்னும் தேர்தலுக்கு பல வருடங்கள் இருக்கு ...

    Reply : 0       0

    RISWAN Sunday, 23 October 2011 09:29 PM

    முஸ்லிம் காங்கிரஸ்க்கு உரிய வாக்குகளே தவிரஇ அது ஹரிக்கு சொந்தமானது அல்லது நிசாமுக்கு உரியது என்று சொல்லிவிட முடியாது. உண்மை அதுவெனில் அவர்கள் தனித்து சுயேச்கையாக நின்று பார்க்கட்டும். இந்த பிரச்சினைகளை பார்க்கும் போது காங்கிரஸ் இன்னும் சுயநலவாதிகளால் பிளபவ படும் என தோன்றுகிறது.

    பிரதேச வாதம், வகுப்பு வாதம், இன்றைய முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆயுதம். இதனால் முஸ்லிம் சமூகம் பிளவு பட்டுவிட்டது. இன்னும் பிளபவபடும். கற்றவர்களே! சிந்தித்து செயல்பட வேணும்.

    Reply : 0       0

    meenavan Monday, 24 October 2011 02:40 AM

    nanpan, எங்களில் யார் இஸ்லாமிய சிந்தனையுடன் வாழ்கிறார்கள்? இந்த தேர்தலில் வேட்பாளர்களின் விளம்பர போஸ்டர்கள் மற்றொரு சகோதரனது சுவர்களில் ஓட்டபட்டிருந்ததை (அனுமதி இன்றி) கண்டிருப்பிர்கள். பிரசார மேடைகளின் வசைபாடல், அவதூறுகள் இஸ்லாமிய உணர்வு மேலோங்கியதா? எனது சிந்தனை காரணமாக, ஒளிபரப்பி சத்தம் கேளாத பகுதிக்கு ஒதுங்கியே சென்றேன். உண்மையில் பட்டம் பதவிகளுடன் யாரும் மரணிப்பதில்லை. ஆனால் மரண அறிவித்தலின் போது அதனை விளம்பரமாக கொள்வர். இது உண்மை.

    Reply : 0       0

    Nusky Monday, 24 October 2011 03:14 AM

    RAZEEK, அது நல்ல பாம்போ இல்ல கெட்ட பாம்போ.... இப்ப அது செத்த பாம்புன்னு ஊருக்கே தெரியும்...ஏன் நீங்க ஊர்ல இல்லையா..? இல்ல இந்த காலத்தில ஊர் பக்கம் வரலையா..? எதுக்கும் ஊர் பக்கம் ஒரு "கோல்" போட்டு பாருங்க..

    Reply : 0       0

    Halky Monday, 24 October 2011 04:21 AM

    MP in 100 nadkal thiddam enka?

    Reply : 0       0

    sakeena Monday, 24 October 2011 06:20 AM

    ஹரீஸ் போய் வந்தவர். கட்சி மாறி, இவரால் வெல்ல முடிந்ததா...? எல்லாம் இந்த மர நிழலினால்தான்...

    Reply : 0       0

    ummpa Monday, 24 October 2011 06:28 AM

    சிராஜு!
    கொஞ்சம் துல்லிப்பார்த்து சிந்தித்தால் புரியும் உங்களுக்கு ! நான் கொஞ்சம் இருந்துதான் சிந்தித்துவிட்டன்.

    Reply : 0       0

    nanpan Monday, 24 October 2011 10:34 AM

    மீனவன் அவர்களே மற்றவர்களை பார்ப்பதற்கு முதல் நம்மை நாம் பார்ப்பது நன்று. நீங்கள் கூறிய மரண அறிவித்தல்தான் இறுதியாக இருக்கும் என்பது எனது கருத்து. இஸ்லாமிய சிந்தன்யுடன் வாழ்பவர்களும் இருக்கிறார்கள் தேடிப்பாருங்கள்.

    Reply : 0       0

    razeek kalmunai Monday, 24 October 2011 06:02 PM

    ஊருக்கு எலக்சன் காலத்துக்கு வருபவர்கள் பக்கம் இருந்து பார்த்தால் அப்படித்தானே விளங்கும். மக்களூ டன் மக்களாக இருந்து பார்த்தல் விளங்கும் மக்கள் விருப்பு என்ன என்று ............................. சட்டம் ஒன்றும் எடுபடாது தம்பி நுஸ்கி.

    Reply : 0       0

    faizmohamed Tuesday, 25 October 2011 03:28 AM

    எனக்கு ஹரீஸ் m p photo ரொம்ப பிரமாதம்

    Reply : 0       0

    nanpan Sunday, 23 October 2011 04:08 PM

    சும்மா பாம்பு ,கோட்டை என்றெல்லாம் அல்லாஹ்வை மறந்து கதைக்க வேண்டாம். அல்லாஹ் எங்கள் எல்லோரது பாவங்களையும் மன்னிப்பானாக. ஹரீஸ் என்பவரும் சாதாரண மனிதர்தான் என்பதை மறந்து கதைக்கவேண்டாம்.

    Reply : 0       0

    ansa Sunday, 23 October 2011 02:17 AM

    ஒழுக்கம் விழுப்பம் தரலால் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்...

    Reply : 0       0

    puli Sunday, 23 October 2011 02:45 AM

    சும்மா போன பாம்பை பிடித்து மடிக்குள் போட்டவர்கள் நீங்கள் நிச்சயம் அனுபவிக்க வேண்டும்.

    Reply : 0       0

    hameed Sunday, 23 October 2011 06:16 AM

    ரசீக், பாயிஸ் சாரப் பாம்பின் புத்துக்குள் கையை விடுகிறாரு நிச்சயமாக கடிக்கமாட்டாது.

    Reply : 0       0

    kavi Sunday, 23 October 2011 09:47 AM

    ஹரீஸ் மீது நடவடிக்கை எடுத்தால் அதனுடன் காங்கிரஸ் பெட்டியை கட்டவேண்டியதுதான். கல்முனையில். நிசாமால் கல்முனையை வெற்றி கொள்ள முடியாது.

    Reply : 0       0

    palam Sunday, 23 October 2011 10:26 AM

    இது எல்லாம் தலைமைக்கு சவால்தான்..... சும்மா போன ஓணானை எடுத்து ....என்ற கதைதான்...

    Reply : 0       0

    rozan Sunday, 23 October 2011 10:28 AM

    பாயிஸை ஆயிரம் மக்கள் வாக்குகளை பெற்று வரச்சொல்லுங்க........ஹரிஸ் அம்பாறைல அதிக வாக்கு பெற்று மக்கள் செல்வாக்கோடு இருக்கிறார்......சும்மா காமடி பண்ணாதிங்கோ.....

    Reply : 0       0

    alilanka Sunday, 23 October 2011 12:30 PM

    ஹரீஸ் சொன்னால் உண்மை இருக்கும்.

    Reply : 0       0

    saafi Sunday, 23 October 2011 03:38 PM

    ராசீக், சம்பவம் தெரியாமல் கருத்து கூறவேண்டாம். பாம்பு புத்து இல்லாமல் போய் விட்டது.

    Reply : 0       0

    razeek kalmunai Sunday, 23 October 2011 01:33 AM

    பாயீஸ் தேவை இல்லாமல் பாம்பின் புத்துக்குள் கையை விடுகிறார்.

    Reply : 0       0

    zar Sunday, 23 October 2011 06:22 PM

    உண்மை இதுதான் தற்போது கல்முனைக்கு நிசாம் தான் தளபதி.

    Reply : 0       0

    meenavan Sunday, 23 October 2011 07:02 PM

    nanpan, ஹரிஸ் சாதாரண மனிதர் என்றால் அவர் எம்.பி. இல்லையா?

    Reply : 0       0

    Nusky Sunday, 23 October 2011 07:44 PM

    எனக்கு பிடித்தது இந்த நியூஸ் ஐ விட ஹரீஸ் இன் போட்டோ தான்.... ரொம்ப கடுப்பாய் இருக்கிறார்...

    Reply : 0       0

    UMMPA Sunday, 23 October 2011 08:07 PM

    ஒரு சவாலை சந்திக்க வேண்டிய கட்டத்துக்கு ஹக்கீம் மாட்டிக்கொண்டார் என நினைக்க வேண்டி உள்ளது . ஏன் என்றால் இதுவரை இப்படி ஒரு நிலைமை கல்முனை மக்களால் ஏற்பட்டதில்லை ! இது தலைமைக்கு சவால் விடப்பட்டுள்ளது போல தெரிகிறது ? இருந்துதான் பார்ப்போமே !!

    Reply : 0       0

    mca fareed Sunday, 23 October 2011 08:11 PM

    பாயிஸ் அவர்களுக்கு தேவையில்லாத வேலை.

    Reply : 0       0

    சிறாஜ் Sunday, 23 October 2011 09:00 PM

    இருந்துதான் இல்ல நீங்க நின்றுதான் பார்த்தாலும் தலைமைக்கு எதுவும் ஆகாதுங்கோ. சும்மா கடுப்பேத்தாம நல்லத சிந்தியுங்கள்.
    நிசாம் காரியப்பர் கல்முனையின் பிரதி மேயர். இவர் சொன்னால் இனிமேல் எல்லாம் கல்முனையில் எடுபடும்.

    Reply : 0       0

    Nusky Sunday, 23 October 2011 09:09 PM

    நமது ஊருக்கு வந்த அதுவும் தலைவர் அனுப்பி வைத்த உயர்பீட உறுப்பினருக்கு இந்த நிலைமையா...? தேர்தல் காலத்தில் தலைவர் வந்தாலும் இதுதான் நடந்திரும்கும்..அதுதான் அவர் வரவில்லைபோலும்..

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .