2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கஞ்சா குற்றச்சாட்டில் கைதானவருக்கு தண்டம்

Kogilavani   / 2014 ஏப்ரல் 23 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் கஞ்சா வைத்திருந்தமை மற்றும்   விற்பனை செய்த குற்றங்களுக்காக கடந்த 2010 ஆம் ஆண்டு கைதான நபருக்கு மாவட்ட நீதவானும், நீதவான் நீதிமன்ற பதில் நீதவானுமாகிய ஏ.ஜி.அலக்ஸ்ராஜா ரூபா 18,000 தண்டப்பணம் விதித்ததுடன் ஐந்து வருடம் ஒத்திவைக்கப்பட்ட 6 மாத சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேற்படி நபர் கடந்த 2010ஆம் ஆண்டு 17.5 கிராம் கிராம் கஞ்சாலை வைத்திருந்தமை, 5 கிராம் கஞ்சாவை விற்பனை செய்தமை போன்ற குற்றங்களுக்காக அக்ரைப்பற்று பொலிஸ் பிரிவின் பொலிஸ் சார்ஜன் யூ.எம்.ஆப்தீன் தலைமையிலான பொலிஸ் குழுவினரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

கல்முனை மேல் நீதிமன்றத்தில் இந் நபருக்கான வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டதுடன் 6 மாதகாலம் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் இந்த நபருக்கான வழக்கினை விசாரணை செய்ய முடியும் என கல்முனை மேல் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதனை அடுத்து செவ்வாய்க்கிழமை(22) அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் மேற்படி நபர் ஆஜர்படுத்தப்பட்ட போது குறித்த நபர் தனது குற்றங்களை ஒப்புகொண்டார்.

இதனையடுத்து நீதவான் மேற்படி உத்தரவினை பிறப்பித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .