2024 மார்ச் 28, வியாழக்கிழமை

500 ஏக்கர் நெற் செய்கையில் கபில நிறத் தத்தி தாக்கம்

Princiya Dixci   / 2021 ஜனவரி 07 , பி.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.கே.றஹ்மத்துல்லா, எம்.ஏ.றமீஸ்

அம்பாறை மாவட்டத்தில் மிக வேகமாக பரவி வரும் கபில நிறத் தத்திகளின் தாக்கத்தால் தற்போது 500 ஏக்கர் விவசாயச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், 50 ஏக்கர் நெற் செய்கை இந்நோய்த் தாக்கத்தால் முற்று முழுதாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனீர் தெரிவித்தார்.

இதனையடுத்து, கபில நிறத் தத்திகளின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் விவசாயத் துறையினரால் தற்போது பல்வேறு விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைவாக, அம்பாறை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு இந்நோய் பற்றியும் இதன் தாக்கத்திலிருந்து எவ்வாறு விடுபட முடியும் என்பது பற்றி விசேட விழிப்புணர்வு நிகழ்வு, அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இன்று (07) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அம்பாறை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனீர் தலைமையில் ஆரம்பமான இவ்விழிப்புணர்வு வேலைத் திட்டத்தின் கீழ், அட்டாளைச்சேனை சந்தை சதுக்கத்தில் மக்கள் மத்தியில் ஒலி பெருக்கியின் மூலம் விழிப்புணர்வு வழங்கப்பட்டதுடன், கபில நிறத் தத்திகள் தொடர்பான கையேடுகளும் மக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டன.

இதேவேளை, கபில நிறத் தத்திகளின் தாக்கம் அதிகம் உள்ள விவசாயச் செய்கைகளுக்கு நேரடியாகச் சென்று, இந்நோய்த் தாக்கம் தொடர்பில் களப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், விவசாயிகளுக்கும் இது தொடர்பான விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X