2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஆன்மீகத் தேவைக்காக தொழில்நுட்பத்தை நாடும் மக்கள்

Editorial   / 2020 ஜூன் 17 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட் - 19 கொள்ளைநோய் உலகளவில் உக்கிரமாக பரவி வருவதால், உலகெங்கும் உள்ள மக்களால் தம் வணக்கஸ்தலங்களில் ஒன்றுகூடி வர முடியாதுள்ளது. சமூக இடைவெளியைப் பேணுவதற்கான பரிந்துரைகளை கடைப்பிடிப்பதோடு, மக்களுக்கு ஆன்மீக உதவி அளிப்பதற்கு முயற்சி செய்ததன் விளைவாக, இலகுவாக அணுகக்கூடிய தங்களது ஆன்லைன் வளங்கள் மூலம் நன்மையடைபவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவு அதிகரித்திருப்பதை யெகோவாவின் சாட்சிகள் அவதானித்துள்ளனர். 

இக் கொள்ளைநோய் ஆரம்பித்தது முதல், சுமார் 1,000 மொழிகளைக் கொண்ட JW.ORG எனும் இணையத்தளத்தைப் பார்வையிடுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது.

பெப்ரவரி மாதத்தில் ஒரு நாளுக்கு சுமார் 20 லட்சம் பேர் இந்த வலைத்தளத்தை பார்வையிட்டனர். அதுவரை, இதுவே இவ் வலைத்தளத்தைப் பார்வையிடுபவர்களின் சராசரி எண்ணிக்கையாகும். மார்ச் மாதத்தில், இந்த எண்ணிக்கை ஒரு நாளுக்கு முப்பது இலட்சம் என்ற வீதத்தில் அதிகரித்தது. ஆனால், ஏப்ரல் மாதம் 7ஆம் திகதியன்று எழுபது இலட்சத்துக்கு அதிகமானோர் JW.ORGஐப் பார்வையிட்டனர். ஒவ்வொரு வருடமும் பல லட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள் இயேசுவின் மரணத்தையும் அவரின் பலியையும் நினைவுகூரும் நாளாக அது அமைந்திருந்தே அதற்குக் காரணமாகும்.

யெகோவாவின் சாட்சிகளின் உலக தலைமை அலுவலகத்தில் மொழிபெயர்ப்பு இலாகா ஒன்றின் கண்காணியாக சேவை செய்யும், கிளிவ் மார்டின் இவ்வாறு சொல்கிறார். “இவ்வருடம், ஆர்வமுள்ள பலரால் உள்ளூரில் இருக்கும் சபைகளுடன் ஒன்றுகூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் நாம் 500க்கும் மேற்பட்ட மொழிகளில், இயேசுவின் மரண நினைவுநாளுடன் சம்பந்தப்பட்ட பைபிள் அடிப்படையிலான பேச்சுகளையும் வீடியோக்களையும் வெளியிட்டிருந்தோம். இந்த நிகழ்ச்சிகள் பல லட்சக்கணக்கான தடவைகள் பார்வையிடப்பட்டன அல்லது பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன”. 

வீடியோ ஸ்டிரீமிங் பலருக்கு ஆறுதலை அளித்தாலும், உலகெங்கும் உள்ள யெகோவாவின் சாட்சிகளின் சபைகள் வீடியோ கொன்பரன்சிங் அப்களைப் பயன்படுத்தி தங்களுடைய கூட்டங்களில் கலந்துகொள்கின்றனர். இந்தக் கூட்டங்கள், அங்கு சொல்லப்படுவதை வெறுமனே செவிமடுப்பவர்களைக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டு ஒருவரை ஒருவர் கட்டியெழுப்பும் விதமான கலந்தாலோசிப்புகளைக் கொண்டிருப்பதால் அதில் கலந்துகொள்ளும் அனைவரும் அதிக பயனடைகின்றனர்.

உலகளாவிய ரீதியில் ஒரு நெருக்கடியான சூழல் நிலவினாலும், இந்த வலைத்தளத்தை பார்வையிடுவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது, ஆறுதலையும் ஆன்மீக வழிநடத்துதலையும் பலருக்கு வழங்குவதில் தொழில்நுட்பம் வகிக்கும் முக்கிய பங்கை எடுத்துக் காட்டுகிறது.

மேலதிக தகவல்களுக்காக, JW.ORGயிலிருந்து எடுக்கப்பட்ட இந்தத் தகவலை மீள் வெளியீடு செய்வதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்காக யெகோவாவின் சாட்சிகளுடைய உள்ளூர் பேச்சாளரான சந்தன பெரேராவைத் தொடர்பு கொள்ளுங்கள். அவருடைய அலைபேசி இலக்கம் 077 238 5577, ஈமெயில் முகவரி PublicInformationDesk.LK@jw.org ஆகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .