2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

“நீ மண்ணாக இருக்கின்றாய் மண்ணுக்கே திரும்புவாய்”

Editorial   / 2020 பெப்ரவரி 27 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயேசு கிறிஸ்து சிலுவையில் உயிர்விட்ட நாள் புனித வெள்ளியாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ மத மக்களால் கடைபிடிக்கப்படுகிறது.

அதை முன்னிட்டு 40 நாட்கள் உபவாசம் இருப்பது அவர்களின் வழக்கம். இந்த நோன்பு காலம் தவக்காலம் என்று கிறிஸ்தவர்களால் அழைக்கப்படுகிறது.

தவக்காலத்தின் முதல் நாள் சாம்பல் புதன் அல்லது திருநீற்றுப் புதனாக கடைபிடிக்கப்படுகிறது. இதன்படி இன்று தவக்காலம் தொடங்கியுள்ளது.

இதையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று காலை சிறப்பு திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன.
 
தவக்காலம் தொடங்கியதன் அடையாளமாக கிறிஸ்தவர்களின் நெற்றியில்  சாம்பலால் சிலுவை அடையாளம் இடப்பட்டது.

இந்த சாம்பலை பங்குத்தந்தை நெற்றியில் பூசும்போது மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய் மண்ணுக்கே திரும்புவாய் என்று கூறி  ஒவ்வொருவரின் நெற்றியிலும் சிலுவை அடையாளம் வரைவார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X