2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இந்துமத முறைப்படி மசூதியில் திருமணம்

Editorial   / 2020 ஜனவரி 19 , பி.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேரள மாநிலத்தில், ஆலப்புழா மாவட்டத்தில், இந்து முறைப்படி, முஸ்லிம் மக்களின் முயற்சியால் மசூதியில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. மத நல்லிணத்துக்கு உதாரணமாக விளங்கிய இந்தத் திருமணத்தை முதல்வர் பினராயி விஜயன் பாராட்டியுள்ளார்.

ஆலப்புழா மாவட்டம், செருவாலி நகரைச் சேர்ந்தவர் பிந்து. இவரின் கணவர் அசோகன் இறந்துவிட்டார். இவர்களுக்கு அஞ்சு என்ற பெண் பிள்ளையொன்றும் உள்ளது.

தனது கணவர் அசோகன் இறந்தபின் மிகவும் வறுமையிலும், சிரமத்திலும் பிந்து

வாழ்க்கையை நடந்தி வந்த பிந்து தனது மகளுக்கு திருமண ஏற்பாடு செய்தார். செருவாலி அருகே கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த சரத் என்பவருக்கு தனது மகளை மணம் முடிக்க ஏற்பாடு செய்தார்.

ஆனால், திருமணச் செலவுக்கு போதுமான பணம் பிந்துவிடம் இல்லாததால்,

செருவாலி முஸ்லிம் ஜமாஅத்திடம் சென்று தனது நிலைமையைக் கூறி உதவக் கோரினார். பிந்துவின் குடும்பச் சூழலை உணர்ந்த ஜமாஅத்தின் செயலாளர்

நிஜுமுதீன் அலுமூட்டில் ஜமாஅத்தில் பிந்துவுக்கு உதவுவது குறித்து ஆலோசனை நடத்தினார்.

மதம் கடந்த உதவி கோரி வந்திருக்கும் பிந்துவின் குடும்பத்தினருக்கு உதவ முஸ்லிம் ஜமாஅத் மக்கள் முன்வந்தனர். திருமண மண்டபம் ஏதும் தேடாமல் மசூதியில் இந்து

முறைப்படி,    திருமணம் நடத்த ஜமாஅத் நிர்வாகிகள் முடிவு செய்தனர். இதை பிந்துவிடம் ஜமாஅத் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மேலும், திருமணத்துக்கு 2500 பேருக்கு தேவையான   உணவு வகைகளையும்

ஜமாஅத் சார்பி்ல் தயாரிக்கப்பட்டது. மணப்பெண் அஞ்சுவுக்கு ஜமாஅத் சார்பில் 10 சவரண் தங்க நகையும், ரூ.2 இலட்சம் மதிப்பிலான பொருள்களும் வழங்க முடிவு செய்யப்பட்டது.

முஸ்லிம் மக்கள் முயற்சியில் இன்று காலை செருவாலி மசூதியில் சரத், அஞ்சுவின் திருமணம் இந்து முறைப்படி அர்ச்சகர் மந்திரங்கள் ஓத திருமணம் நடந்தது.

திருமணத்துக்கு ஏராளமான முஸ்லிம்களும் இந்துக்களும் வந்திருந்து மணமக்களை வாழ்த்திச் சென்றனர்.

இந்த திருமணம் குறித்து அறிந்து முதல்வர் பினராயி விஜயன் திருமணப் புகைப்படத்தைத் தனது பேஸ்புக்கில் பதிவிட்டு ஜமாஅத் குழுவுக்கும், மணமக்களுக்கும் வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .