2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

காங்கிரஸிலிருந்து விலகிய ஜோதிர்ஆதித்யா சிந்தியா

Editorial   / 2020 மார்ச் 10 , பி.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் முன்னாள் அமைச்சரான ஜோதிர்ஆதித்யா சிந்தியா, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து இன்று காலையில் இராஜினாமா செய்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியையும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் டெல்லியில் சந்தித்த சிறிது நேரத்திலேயே காங்கிரஸ் கட்சியிலிருந்து ஜோதிர்ஆதித்யா இராஜினாமா செய்திருந்தார்.

பாரதிய ஜனதாக் கட்சியில் (பா.ஜ.க) ஜோதிர்ஆதித்யா சிந்தியா இணைவார் என எதிர்பார்க்கப்படுவதுடன், இவருக்கு நாடாளுமன்ற மேற்சபையில் ஆசனமொன்றும் பின்னர் அமைச்சரவையில் இடமொன்றும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனது டுவிட்டர் கணக்கில் ஜோதிர்ஆதித்யா சிந்தியா பதிவிட்ட இராஜினாமாக் கடிதமானது நேற்று முன்தின திகதியிடப்பட்டிருந்ததுடன், காங்கிரஸின் தலைவர் சோனியா காந்திக்கு முகவரியிடப்பட்டிருந்தது.

குறித்த கடிதத்தில், தனது மாநில, நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவதற்கு இனிமேலும் காங்கிரஸ் கட்சியிலிருந்து இருந்து முடியாது எனத் தான் நம்புவதாக ஜோதிர்ஆதித்யா சிந்தியா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஜோதிர்ஆதித்யா கடிதத்தை பதிவிட்ட சில நிமிடங்களில் அவரைக் கட்சியிலிருந்து காங்கிரஸ் வெளியேற்றியிருந்தது. கட்சிக்கெதிரான நடவடிக்கைகளுக்காக உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஜோதிர்ஆதித்யா சிந்தியா வெளியேற்றப்பட்டதாக அறிக்கையொன்றில் காங்கிரஸின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் குறிப்பிட்டிருந்தார்.

குறிப்பிட்ட காலமாக காங்கிரஸ் தலைமைத்துவத்துடன் ஜோதிர்ஆதித்யா சிந்தியா மகிழ்வற்று இருந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு காலத்தில் காந்தி குடும்பத்துக்கு நெருக்கமானவராக ஜோதிர்ஆதித்யா சிந்தியா காணப்பட்டிருந்தார்.

இதேவேளை, இராஜினாமா செய்த மத்தியப் பிரதேச சட்டசபை உறுப்பினர் பிஸஹு லாலும் பா.ஜ.கவில் இணைந்ததுடன், வேறு காங்கிரஸ் தலைவர்களும் பா.ஜ.கவில் இணையக் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .