2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கடந்த அரசுகள் மாற்றுத் திறனாளிகளின் நலனில் அக்கறை செலுத்தவில்லை

Editorial   / 2020 மார்ச் 01 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரயாக்ராஜ்,


மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களின் நலனில் அரசு மிகுந்த அக்கறை காட்டுகிறது. கடந்த  அரசாங்கங்கள் மாற்றுத் திறனாளிகளின் நலனில் அக்கறை

செலுத்தவில்லை. அப்போது பதவியில் இருந்தவர்கள் தங்கள் பிரச்சினைகளை எப்படி தீர்ப்பது என்பதிலேயே கவனம் செலுத்தினார்கள்.

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் (அலகாபாத்) மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

 அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதமர் மோடி, உத்தரபிரதேச கவர்னர் ஆனந்திபென் பட்டேல், முதலமைச்சர்  யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பிரதமர் மோடி பேசுகையில் கூறியதாவது:-

மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக அவர்கள் சில முகாம்களையே நடத்தினர். ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 9 ஆயிரம் முகாம்கள்

நடத்தப்பட்டு, அவர்களுக்கு ஏராளமான உதவிகளும், உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன.

மாற்றுத்திறனாளிகளுக்காக மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களைச்

செயல்படுத்தி வருகிறது. 700இக்கும் அதிகமான ரெயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் அவர்களுக்குத் தேவையான வசதிகள் செய்து

கொடுக்கப்பட்டுள்ளன.  

நாட்டிலுள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்களின் பலன்களும், நீதியும் கிடைப்பதை உறுதி செய்வது அரசின் கடமை ஆகும். எனவே இதற்கு நாங்கள்

முன்னுரிமை அளித்து வருகிறோம் என்று பிரதமர் மோடி கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .