2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

கமல்ஹாசனிடம் இரண்டரை மணி நேரம் விசாரணை

Editorial   / 2020 மார்ச் 03 , பி.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துவரும் இந்தியன்-2 படப்பிடிப் பில் கிரேன் விழுந்து விபத்துக்குள்ளானதில் உதவி இயக்குநர் உட்பட மூவர் உயிரிழந்தனர். இந்த வழக்கைச் சென்னை மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் விசாரித்து வருகின்றனர். 

துணை ஆணையர் நாகஜோதி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். படப்பிடிப்புத் தளத்தில் நிகழ்ந்த விபத்து தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு, கமல், ஷங்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. 

இதையடுத்து இயக்குநர் ஷங்கர் கடந்த வெள்ளிக்கிழமை சென்னை பொலிஸ் கமிஷனர்  அலுவலகத்திலுள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் விபத்து தொடர்பாக பொலிஸார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து இந்தியன் 2 படத்தின் கதாநாயகனும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனுக்கு சம்மன் அனுப்பப்பட்டு, இன்று அவர் விசாரணைக்கு ஆஜரானார்.

கமல்ஹாசனிடம் இரண்டரை  மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடைபெற்றது.  அவரது வாக்கு மூலம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. 

விசாரணை  முடிந்து கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் நடந்ததை கூறினேன்.  இனி இது போன்ற விபத்துக்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .