2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ராஜ்யசபை நாளை காலை 11 மணிவரை ஒத்திவைப்பு

Editorial   / 2020 மார்ச் 03 , பி.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

புதுடெல்லி

 

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வுக்காக நாடாளுமன்றம் நேற்று கூடியது.  டெல்லி வன்முறைக்கு பொறுப்பு ஏற்று உள்துறைஅமைச்சர்  அமித் ஷா

பதவி விலக கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின்  இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.

இதை தொடர்ந்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, நாடாளுமன்றம் இன்று அமைதியாக செயல்படுவதை உறுதி செய்வதற்காக அனைத்துக் கட்சிக்

கூட்டத்தைக் கூட்டினார்.  இந்தக் கூட்டத்தில், அனைத்துக் கட்சி உறுப்பினர்களையும் நாடாளுமன்றம்  அமைதியாக செயல்பட ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டு கொண்டார்.

இன்று நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை 11 மணிக்கு கூடியதும் டெல்லி வன்முறைக்கு பொறுப்பு ஏற்று உள்துறை அமைச்சர்  அமித் ஷா பதவி விலக கோரி 

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து மாநிலங்களவை பிற்பகல்  2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், அவை மீண்டும் கூடியதும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். 

இதனால் அவை நடவடிக்கைகளில் இடையூறு ஏற்பட்டது.  இதனை அடுத்து நாடாளுமன்ற மேலவை நாளை காலை 11 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .