2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

விபத்தில் சிக்கிய ஐயப்ப பக்தர்களுக்கு உதவிய முஸ்லிம்கள்

Editorial   / 2020 ஜனவரி 07 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்பொழி

கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் நேற்று அச்சன்கோவில் ஐயப்பன் கோவிலுக்கு வானில் சென்று கொண்டிருந்தனர். 

வானில் 2 குழந்தைகள் உட்பட 14 ஐயப்ப பக்தர்கள் சென்றுள்ளனர்.

தென்காசி மாவட்டம் பண்பொழி அருகே வடகரை சாலையில் சென்றபோது சாலையின் நடுவில் உள்ள தடுப்புச் சுவர் மீது வான் மோதி விபத்துக்குள்ளானது.   வானில் இருந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.

இதை அறிந்த பண்பொழியைச் சேர்ந்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தை நிர்வாகிகள் அப்பகுதிக்கு சென்று சென்றனர்.

குளிர் மற்றும் கொசுக்கடியால் அவதிப்பட்ட ஐயப்ப பக்தர்களுக்கு பண்பொழியில் உள்ள தமுமுக அலுவலகத்தில் தங்குவதற்கு இடம் கொடுத்தனர்.

மேலும் மெக்கானிக்கை அழைத்து வந்து வானை பழுதுபார்க்க உதவினர். அதிகாலை 3.30 மணியளவில் வான் பழுது பார்க்கப் பட்டு தயார் செய்யப்பட்டது.

அதுவரை தமுமுக நிர்வாகிகள் உடனிருந்து தேவையான உதவிகளைச் செய்தனர். அவர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி கூறி ஐயப்ப பக்தர்கள் விடைபெற்றுச் சென்றனர்.

மதங்களைக் கடந்த மனிதநேயம் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .