2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஆம்பன் சூறாவளியால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 95ஆக அதிகரித்தது

Editorial   / 2020 மே 22 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியா, பங்களாதேஷில் ஆம்பன் சூறாவளியால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது நேற்று 95ஆக அதிகரித்துள்ளது.

ஆம்பன் சூறாவளியானது வீடுகளைத் தரைமட்டமாக்கியிருந்ததுடன், மரங்களைப் பெயர்த்திருந்ததுடன், கூரைகளைப் பிய்த்திருந்ததுடன், மின்கம்பங்களை கவிழ்த்தியிருந்ததுடன், கரையோரக் கிராமங்களை வெள்ளத்தில் மூழ்கடித்ததுடன், உள்ளூர் பொருளாதாரத்துக்கு ஆதாரமான இறால் பண்ணைகளை அழித்திருந்தது.

10 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டதாகவும், 500,000 பேர் வீடுகளை இழந்திருக்கலாம் என பங்களாதேஷிலுள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகம் மதிப்பிட்டிருந்தது.

எவ்வாறெனினும், மேம்பட்ட வானிலை எதிர்வுகூறல், சிறந்த பதிலளிப்புத் திட்டங்களால்  முன்னைய சூறாவளிகளால் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதிலும் குறைவாக உயிரிழந்தோர் எண்ணிக்கை காணப்பட்டது.

இந்தியாவின் மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் 15 பேர் உட்பட 72 பேர் அம்மாநிலத்தில் உயிரிழந்ததுட்டன், உத்தியோகபூர்வ உயிரிழந்தோர் எண்ணிக்கையின்படி பங்களாதேஷில் 23 பேர் இறந்துள்ளனர்.

பங்களாதேஷின் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் குறைந்தது 10 மில்லியன் பேர் மின்சாரமில்லாமல் நேற்று மாலை வரை காணப்பட்டதாக உள்ளூர் மின்சார சபைத் தலைவர் மொய்ன் உட்டின் கூறியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X