2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இறுதிச்சடங்கில் பங்கேற்ற 58 பேருக்கு கொரோனா தொற்று

A.K.M. Ramzy   / 2020 ஜூன் 30 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேலம்

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மற்றும் வெளிநாடு, வெளிமாநிலம், பிற மாவட்டங்களில் இருந்து சேலம் வந்தவர்கள் என 700இக்கும் மேற்பட்டவர்கள்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

இவர்களில் 300இக்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீட்டுக்குச் சென்றனர். நேற்று முன்தினம் 34 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி  மாணவர்கள் 5 பேர் உட்பட 109 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதிசெய்யப்பட்டது.

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 8 பேர், ஓமலூரில் 14 பேர், பெத்தநாயக்கன்பாளையத்தில் 13 பேர், கொங்கணாபுரம் பகுதியில் 10 பேர் மற்றும்

தாரமங்கலம், அயோத்தியாப் பட்டணம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சிலர், சென்னையில் இருந்து சேலம் வந்த 2 பேர், தேனியில் இருந்து வந்த 13 பேர், தர்மபுரி,

சிவகங்கை, கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் இருந்து சேலம் வந்த தலா 3 பேர் மற்றும் மருத்துவ மாணவர்கள் உட்பட79 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூர் பண்ணவாடியில் செல்வம் என்பவர் 21ஆம் திகதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

இறுதிச் சடங்கில் பங்கேற்ற 2 மருத்துவர்கள் உட்பட 4 பேருக்கு கொரோனா முதலில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து நடத்திய சோதனையில்

இறுதிச்சடங்கில் பங்கேற்ற ஒரே கிராமத்தை சேர்ந்த 58 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .