2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

குடியுரிமை திருத்த சட்டத்தை எந்த மாநிலமும் மறுக்க முடியாது

Editorial   / 2020 ஜனவரி 19 , பி.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 தமிழகம்

குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை அமுல்படுத்த முடியாதென்று எந்த மாநிலமும் மறுக்க முடியாது. அவ்வாறு செய்வது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகக் காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களும் பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்கள் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தையும்  என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றைக் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

குறிப்பாகக் கேரளா, பஞ்சாப் மாநில அரசுகள் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கூறி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளது.

இந்த சூழலில் கேரள மாநிலம் கோழிக்கோடு நகரில் கேரள இலக்கிய திருவிழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் நேற்றுப்  பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது:

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எந்த மாநிலமும் அமுல்படுத்தமாட்டோம் என்று கூற முடியாது. அவ்வாறு எந்த மாநில அரசாவது கூறினால் அது அரசமைப்புச்

சட்டத்துக்கு விரோதமானது. சிஏஏவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கலாம், சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றலாம், சட்டத்தை திரும்பப் பெறக் கோரி மத்திய அரசிடம் கேட்கலாம்.

ஆனால், நடைமுறைப்படுத்த முடியாது என்று கூற முடியாது. அவ்வாறு கூறினால் அரசமைப்புச் சட்டரீதியாக பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும்.

என்ஆர்சி என்பது என்பிஆர் அடிப்படையாகக் கொண்டது. என்பிஆர் நடைமுறைப்படுத்துவது உள்ளூர் பதிவாளர்.அந்த பதிவாளர் எங்கிருந்து நியமிக்கப்படுவார், யார் நியமிப்பார் என்றால் மாநில அரசுதான் நியமிக்க வேண்டும்.

ஆனால், மத்திய அரசின் பணிக்கு மாநில அரசு அதிகாரிகளைப் பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம் என்று கூற முடியுமா. நடைமுறைக்கு இவ்வாறு கூறுவது சாத்தியமாகாது, அவ்வாறு செய்யவும் முடியாது.

அவ்வாறு மாநில அரசு கூறினால் அரசியலமைப்பு ரீதியாக மாநில அரசுக்கு பெரும் நெருக்கடியை உருவாக்கும். ஏனென்றால் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டுவிட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .