2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சட்டங்களைத் திரும்பப் பெறுவதே தீர்வு

A.K.M. Ramzy   / 2021 ஜனவரி 17 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

புது டில்லி:

விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது ஒன்றே தீர்வாக இருக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் ஜனவரி 19 ஆம் திகதி  மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. முன்னதாக வேளாண் சட்டம் குறித்த ஆட்சேபணைகள் மற்றும் பரிந்துரைகள் பற்றி தெரிவிப்பதற்காக அதிகாரபூர்வமற்ற குழு அமைக்குமாறு மத்திய அரசு கடந்த வெள்ளிக் கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது வலியுறுத்தியுள்ளது. 

ஆனால், மூன்று சட்டங்களையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதையே விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது தொடர்ச்சியான டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது:

எதிர்பார்த்தபடியே, விவசாயிகளுக்கும் அரசுத் தரப்புக்கும் இடையே நடைபெற்ற மற்றொரு சுற்றுப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது. சர்ச்சைக்குரிய சட்டங்களைத் திரும்பப் பெற மத்திய அரசு மறுக்கிறது. இதில் தவறு அரசிடமே உள்ளது.

இந்தச் சட்டங்களை அறிவிக்கும் முன் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பதிலின்படி, அரசு கூறுவது பொய் என்பது அம்பலமாகியுள்ளது. உண்மையில் இந்தச் சட்டம் தொடர்பாக யாரிடமும் அரசு ஆலோசிக்கவில்லை. குறிப்பாக மாநில அரசுகளிடம் இது குறித்து ஆலோசிக்கப்படவில்லை என் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .