2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பட்ஜெட் தாக்கல் இன்று ;மீண்டும் கவர்ச்சி அறிவிப்பு

A.K.M. Ramzy   / 2021 பெப்ரவரி 23 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை :

தமிழக அரசின், 2021 - 22ம் நிதி ஆண்டிற்கான, இடைக்கால பட்ஜெட்டை, துணை முதல்வர் ஓ.பி.எஸ்., இன்று சட்டசபையில் தாக்கல் செய்கிறார். பொதுத்தேர்தல் வர உள்ளதால், பட்ஜெட்டிலும், பட்ஜெட் கூட்டத் தொடரிலும், கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டசபை கூட்டம், இன்று துவங்குகிறது. காலை, 11:00 மணிக்கு, துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பி.எஸ்., 2021 - 22ம் நிதி ஆண்டிற்கான, இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். நிதி அமைச்சராக, 11வது முறையாக, இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

அ.தி.மு.க., அரசின் பதவிக்காலம், மே, 24இல் நிறைவடைவதால், இந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மேலும், சட்டசபை தேர்தல் வருவதால், பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் இடம் பெறலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் கூட்டத்தொடர், எத்தனை நாள் நடக்கும் என்பது, இன்று சபாநாயகர் தனபால் தலைமையில் நடக்கும், அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவாகும். இந்த கூட்டத் தொடரில், அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில், 110 விதியின் கீழ், ஏராளமான புதிய கவர்ச்சிகரமான அறிவிப்புகளை, முதல்வர் இ.பி.எஸ்., வெளியிட உள்ளார்.

கடந்த சட்டசபை கூட்டத் தொடரை, தி.மு.க., கூட்டணி முழுமையாக புறக்கணித்தது. இந்த கூட்டத்தொடரில், தி.மு.க., கூட்டணி கட்சிகள், முழுமையாக பங்கேற்குமா என்பதும், இன்று தெரியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X