2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மக்கள் நீதி மய்யத்தின் முதலமைச்சர் வேட்பாளர் கமல்

Shanmugan Murugavel   / 2020 ஒக்டோபர் 16 , பி.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியாவின் தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மையம் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து மக்கள் நீதி மையம் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் இன்று நடைபெற்றது. சென்னை பாண்டி பஜாரில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் அக்கட்சியின் மாநில நிர்வாக மற்றும் செயற்குழு கூட்டம் இன்று காலை 11 மணிக்கு துவங்கியது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 30க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆலோசனை கூட்டத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்தும், தேர்தல் அறிக்கை தயாரிப்பது, வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

கூட்டத்துக்கு பிறகு அக்கட்சி சார்பில் வெளியான அறிக்கையில், “அடுத்தாண்டு சட்டசபை தேர்தலின்போது தனித்துப் போட்டியிடுவது அல்லது ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திப்பது, வேட்பாளர்களை இறுதி செய்வது, தேர்தல் வெற்றிக்கான வியூகம் அமைப்பது, கன்னியாகுமரி நாடாளுமன்ற கீழ்ச்சபை இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்த முக்கிய முடிவுகளை எடுக்கும் பொறுப்பை கமல்ஹாசனுக்கு அளிக்கப்படுவதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சட்டசபைத் தேர்தலில் மக்கள் நீதி மையத்தின் முதலமைச்சர் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன் அறிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .