2024 மார்ச் 28, வியாழக்கிழமை

முதல்வர் வீட்டை முற்றுகையிட முயன்ற பொதுப்பணித்துறை ஊழியர்கள் கைது

A.K.M. Ramzy   / 2020 செப்டெம்பர் 16 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுச்சேரியில் முதல்வர் வீட்டை முற்றுகையிட முயன்ற பொதுப்பணித்துறை ஊழியர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறையில், தற்காலிக(வவுச்சர்) ஊழியர்களாக பணிபுரிந்து வரும் 1,311 ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து, தினக்கூலி ஊழியர்களாக மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, வவுச்சர் ஊழியர்கள் 50 பேர், புதன்கிழமை காலை புதுவை முதல்வர் நாராயணசாமியின் வீட்டை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.

அவர்களை ஒதியன்சாலை பொலிஸார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி கைது செய்தனர்.

அப்போது பொலிஸாருக்கும், ஊழியர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X