2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மகாராஷ்ரா அரசாங்கத்தை கலைக்கக்கோரிய மனு தள்ளுபடி

Shanmugan Murugavel   / 2020 ஒக்டோபர் 16 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 இந்தியாவின் மகாராஷ்ரா மாநில அரசாங்கத்தைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்த வேண்டும் எனக்கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மஹாராஷ்ரா சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா, ஷிவ் சேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில், இக்கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும், முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கூட்டணி முறிந்தது. இதன் பின்னர், தேசியவாத காங்கிரஸ், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் ஷிவ் சேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே ஆட்சியமைத்தார்.

இந்நிலையில், டெல்லியைச் சேர்ந்த மூன்று பேர், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மகாராஷ்ரா மாநில அரசாங்கத்தைக் கலைத்துவிட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் எனக்கூறியிருந்தனர்.

இந்த வழக்கில், இன்று தீர்ப்பு வழங்கிய பிரதம நீதியரசர் பொப்டே தலைமையிலான அமர்வு, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டதுடன், மனுதாரர் குடியரசுத் தலைவரை அணுகலாம். இங்கு வரக்கூடாது என உத்தரவு பிறப்பித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .