2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இன்றைய பலன்கள் (01.08.2013)

A.P.Mathan   / 2013 ஜூலை 31 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}



இன்றைய பலன்கள் (01.08.2013)
 
மேடம்
உணவு விடயத்தில் கட்டுப்பாடு தேவை, தகுந்த ஓய்வும் தேவை. வாடிக்கையாளர்களின் எதிர்ப்பைக் கண்டு அச்சம் கொள்வீர்கள். சக பணியாளர்களால் பணிசுமைக்கு ஆளாக நேரிடும்.
அஸ்வினி : கஷ்டம் 
பரணி : துன்பம் 
கிருத்திகை 1ஆம் பாதம்: பயம்
 
 
இடபம்
போதிய வருமானத்தினால் ஆடம்பர பொருட்கள் மீது நாட்டம் அதிகரிக்கும். பெண்களுக்கு தலைமைப் பொறுப்புக்கள் கூடி வரும். நவீன உக்திகளால் வாடிக்கையாளர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.
கிருத்திகை 2, 3, 4: மகிழ்ச்சி
ரோகிணி : இன்பம்
மிருகசீரிடம் 1, 2: லாபம்
 
 
மிதுனம் 
பணவரவு சுமார்தான் என்றாலும் சமாளித்து விடுவீர்கள். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். நண்பர்களுடன் பொழுதை சுகமாக களிப்பீர்கள். 
மிருகசீரிடம் 2, 3: இன்பம் 
திருவாதிரை: துக்கம் 
புனர்பூசம்: மகிழ்ச்சி 
 
 
கடகம்
பெற்றோர்களின் உடல் நிலையில் அக்கறை காட்டுவது அவசியம். சோம்பல்களால் தேவையில்லாத காலதாமதம் உண்டாகலாம். பெண்கள் பொறுமையுடன் பேசினால் பிரச்சினையில் இருந்து தப்பிக்கலாம்.
புனர்பூசம்: துன்பம்  
பூசம் : கஷ்டம் 
ஆயில்யம்: துக்கம்
 
 
சிம்மம்
கடின அலைச்சலால் உடல் நிலையில் சோர்வு காணப்படும். வாடிக்கையாளர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். வளர்ச்சிக்கான விடயங்களைத் தள்ளிப்போடுவது நல்லது.
மகம்: கஷ்டம்
பூரம்: துன்பம்
உத்திரம் 1ஆம் பாதம்: துக்கம்
 
 
கன்னி
புதிய நண்பர்களின் மூலம் நல்ல நட்புகள் கிடைக்கும். விருந்து உண்ணும் வாய்ப்புக்கள் தேடி வரும். பெண்கள் சுப நிகழ்ச்சிகளுக்கு தலைமை வகிக்கும் வாய்ப்புக்கள் உண்டாகும். 
உத்திரம் 2, 3, 4: இன்பம் 
அஸ்தம்: அலைச்சல்
சித்திரை 1, 2ஆம் பாதம்: மகிழ்ச்சி
 
 
துலாம்
மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுரையைக் கேட்டு நடப்பது நல்லது. ஏற்றம் தரும் வகையில் பொருளாதாரம் சிறப்பாக அமையும். கடின உழைப்பின் மூலம் ஆதாரத்தை தக்க வைத்துக்கொள்வீர்கள். 
சித்திரை 3, 4ஆம் பாதம் : கவனம் 
சுவாதி: இன்பம் 
விசாகம் 1, 2, 3: லாபம்
 
 
விருட்சிகம்
உடலில் அசௌகர்யம் தென்படலாம். மருத்துவ ஆலோசனை தேவை. பணி சுமைக்கு ஆளாக நேரிடும். செலவு கட்டுக்கடங்காமல் போகும். சிக்கனம் அவசியம்.
விசாகம் 4: பயம் 
அனுசம்: துக்கம் 
கேட்டை: துன்பம் 
 
 
தனுசு
கடின பேச்சுக்களால் மனம் சஞ்சலமடையும். பொறுமையுடன் பேசுவது அவசியம். வாடிக்கையாளர்களின் ஆதரவு குறைவாகவே காணப்படும். 
மூலம்: கஷ்டம் 
பூராடம்: துக்கம் 
உத்திராடம் 1ஆம் பாதம்: பயம் 
 
 
மகரம்
மக்கள் மத்தியில் செல்வாக்கைப் பெறுவீர்கள். எதிர்பார்த்த பணிமாற்றங்கள் மகிழ்ச்சியுடையதாகவே இருக்கும். முயற்ச்சி செய்யும் காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும்.
உத்திராடம் 2, 3, 4: மகிழ்ச்சி 
திருவோணம்: இன்பம்
அவிட்டம் 1, 2: வெற்றி 
 
 
கும்பம்
இல்லத்து பெரியவர்களின் ஆசிர்வாதங்கள் கிடைக்கப்பெறுவீர்கள். நவீன உக்திகளால் புதிய ஆதரவைப் பெறுவீர்கள். சுப நிகழ்ச்சிகள் பற்றிய பேச்சுவார்த்தைகள் வீட்டில் அடிக்கடி நடக்கும். 
அவிட்டம் 3, 4: இன்பம் 
சதயம் : மகிழ்ச்சி 
பூரட்டாதி 1, 2, 3: லாபம்
 
 
மீனம்
வியாபாரத்தில் இனிமையாகப் பேசி மற்றவர்களைக் கவர்வீர்கள். புதிய வாய்ப்புக்கள் தேடி வரும். பணியிடத்தில் செல்வாக்கு கூடும் வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படும். 
பூரட்டாதி 4: வெற்றி
உத்திரட்டாதி : இன்பம்
ரேவதி : லாபம்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X