2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இன்றைய பலன்கள் (15.06.2011)

A.P.Mathan   / 2011 ஜூன் 14 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய பலன்கள் (15.06.2011)

இன்று கர வருடம் வைகாசி மாதம் 32ஆம் நாள் (15.06.2011) புதன்கிழமை. சித்த மேல் மரண யோகமும் பௌர்ணமி திதியும் கேட்டை நட்சத்திரம் காலை 01.55 மணிவரை, பின்பு மூலம்.

இராகு காலம் : காலை 12.00 மணி முதல் 1.30 மணிவரை.
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9.00 மணிவரை, இரவு 12.00 மணி முதல் 1.30 மணிவரை.
நல்ல நேரம் : காலை 9.30 மணி முதல் 10.30 மணிவரை, மாலை 4.30 மணி முதல் 5.30 மணிவரை.



மேடம்
நண்பர்களின் மூலம் செய்திகள் கிடைக்கும், புதிய ஆடை அணிகலன்கள் சேருதல், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
அஸ்வினி: மேன்மை
பரணி: தகவல்
கிருத்திகை 1ஆம் பாதம்: அதிர்ஷ்டம்


இடபம்
சில இடமாற்றங்கள் ஏற்படும், வெளிதேச பயணங்கள் செல்ல நேரிடும், குடும்பத்தில் பெண்களினால் மகிழ்ச்சி உண்டாகும்.
கிருத்திகை 2, 3, 4: பிரயாணம்
ரோகிணி: நன்மை
மிருகசீரிடம் 1, 2: குடும்ப ஒற்றுமை


மிதுனம்
பணம் சேமிப்பதில் அதிக ஊக்கம் தேவை, பல திறமையான சாதனைகளினால் வெற்றி கிடைக்கும், நல்ல செய்திகள் கிடைக்கும்.
மிருகசீரிடம் 2, 3: அனுகூலம்
திருவாதிரை: ஆர்வம்
புனர்பூசம்: நற்செய்தி


கடகம்
அனாவசிய ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும், புதிய முயற்சிகள் அலைச்சலை தரும், தேவையற்ற பிரச்சினைகளினால் பயம் ஏற்படும்.
புனர்பூசம்: விரயம்
பூசம்: கஷ்டம்
ஆயில்யம்: சிரமம்


சிம்மம்
வியாபாரத்தில் நவீன நுட்பங்களை பயன்படுத்துதல், பொன் பொருள் சேர்க்கை, புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.
மகம்: அதிர்ஷ்டம்
பூரம்: நட்பு
உத்திரம் 1ஆம் பாதம்: முன்னேற்றம்


கன்னி
உண்ணும் உணவில் வெறுப்பு தன்மை ஏற்படுதல், சிலவிதமான சிக்கல்கள் ஏற்படும், பகைவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும்.
உத்திரம் 2, 3, 4: துன்பம்
அஸ்தம்: பகை
சித்திரை 1, 2ஆம் பாதம்: விருப்பமின்மை


துலாம்
பணவரவுகள் சற்று தாமதத்தை ஏற்படுத்தும், கடின உழைப்புடன் செயல்படுவது அவசியம், பிறரின் மூலம் உதவிகள் கிடைக்கும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: நஷ்டம்
சுவாதி: ஊக்கம்
விசாகம் 1, 2, 3: ஆதாயம்


விருட்சிகம்
சிறு மனகுழப்பங்கள் சஞ்சலங்கள் ஏற்படும், புதிய வாய்ப்புக்கள் பின்தள்ளப்படும், தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
விசாகம் 4: தோல்வி
அனுசம்: பகை
கேட்டை: வெறுப்பு


தனுசு
இன்பகரமான செய்திகள் கிடைக்கும், நெருங்கிய நண்பர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும், பொழுதுபோக்குகளில் மகிழ்ச்சியுடன் ஈடுபடல்.
மூலம்: நல்ல செய்தி
பூராடம்: இன்பம்
உத்திராடம் 1ஆம் பாதம்: ஒற்றுமை


மகரம்
சேமிப்பை விட செலவுகள் அதிகரிக்கும், வியாபாரத்தில் மறைமுக போட்டிகள் ஏற்படும், புதிய வேலைகள் அலைச்சலை ஏற்படுத்தும்.
உத்திராடம் 2, 3, 4: பயம்
திருவோணம்: விரயம்
அவிட்டம் 1, 2: தவறுகள்


கும்பம்
ஒவ்வாத உணவினால் உடல் உஷ்ணம் அதிகரிக்கும், தேவையற்ற பேச்சுக்களினால் மனஸ்தாபம், பிறரின் ஆதரவு கிடைக்கும்.
அவிட்டம் 3, 4: சங்கடம்
சதயம்: தேகசுகம்
பூரட்டாதி 1, 2, 3: சஞ்சலம்


மீனம்
பகைவர்களினால் இடையூறுகள் ஏற்படும், தீய நண்பர்களின் நட்புக்களை தவிர்க்கவும, வரவு குறைந்து செலவுகள் அதிகரிக்கும்.
பூரட்டாதி 4: பயம்
உத்திரட்டாதி: சிக்கல்
ரேவதி: செலவு
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .