2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இன்றைய பலன்கள் (16.07.2011)

A.P.Mathan   / 2011 ஜூலை 15 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய பலன்கள் (16.07.2011)

இன்று கர வருடம் ஆனி மாதம் 31ஆம் நாள் (16.07.2011) சனிக்கிழமை. சித்த யோகமும் பிரதமை திதியும் உத்திராடம் நட்சத்திரம் மாலை 11.44 மணிவரை, பின்பு திருவோணம்.

இராகு காலம் : காலை 09.00 மணி முதல் 10.30 மணிவரை.
எமகண்டம் : மாலை 01.30 மணி முதல் 03.00 மணிவரை, இரவு 07.30 மணி முதல் 09.30 மணிவரை.
நல்ல நேரம் : காலை 07.45 மணி முதல் 08.45 மணிவரை, மாலை 04.45 முதல் 05.45 மணிவரை.


மேடம்
தொழில் ஸ்தானத்தில் அதிகாரிகளுடன் ஒத்துழைப்புடன் செயல்படவும், மன குழப்பங்கள் ஏற்படும், தீயவர்களினால் சிக்கல்கள் ஏற்படும்.
அஸ்வினி: சிக்கல்
பரணி: பொறுமை
கிருத்திகை 1ஆம் பாதம்: வெறுப்பு


இடபம்
சேமிப்பை விட செலவுகள் அதிகரிக்கும், செயல்களில் தவறுகள் ஏற்படும், கடின வாக்குவாதங்கள் ஏற்படும்.
கிருத்திகை 2, 3, 4: பதற்றம்
ரோகிணி: நாவடக்கம்
மிருகசீரிடம் 1, 2: செலவு


மிதுனம்
இன்பகரமான செய்திகள் வந்து சேரும், தனவரவு ஏற்படும், குடும்பத்தாருடன் பொழுதுபோக்குகளில் மகிழ்ச்சியுடன் ஈடுபடல்.
மிருகசீரிடம் 2, 3: தகவல்
திருவாதிரை: குதூகலம்
புனர்பூசம்: சந்தோஷம்


கடகம்
உண்ணும் உணவில் விருப்பமின்மை ஏற்படுதல், பகைவர்களின் சகவாசங்களை தவிர்க்கவும், புதிய காரியங்கள் அலைச்சலை ஏற்படுத்தும்.  
புனர்பூசம்: நிம்மதியின்மை
பூசம்: பிரச்சினை
ஆயில்யம்: சிரமம்


சிம்மம்
நிம்மதியான தூக்கம் கிடைக்கும், புண்ணிய ஸ்தலங்கள் செல்வதனால் மனஅமைதி கிடைக்கும், தூய்மையான ஆடைகளை அணியலாம்.
மகம்: பிரார்த்தனைகள்
பூரம்: சுபம்
உத்திரம் 1ஆம் பாதம்: மனஅமைதி


கன்னி 
பிறரின் பிரச்சினைகளை பேசுவதால் சங்கடம், பெண்களுடன் நாவடக்கத்துடன் செயல்படவும், மன அழுத்தங்கள் ஏற்படும்.
உத்திரம் 2, 3, 4: வாக்குவாதம்
அஸ்தம்: சங்கடம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: கவலை


துலாம்
வியாபாரத்தில் நவீன நுட்பங்களை மேம்படுத்தல், பொன் - பொருள் சேர்க்கை, நண்பர்களுடன் பொழுதுபோக்குகளில் ஈடுபடல்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: முயற்சி
சுவாதி: இன்பம்
விசாகம் 1, 2, 3: அதிர்ஷ்டம்


விருட்சிகம்
சரும நோய்கள் வந்து நீங்கும், புதிய முயற்சிகளை தவிர்த்துக் கொள்ளவும், அறிமுகமற்ற நட்புக்களினால் சிக்கல்கள் ஏற்படும்.
விசாகம் 4: குழப்பம்
அனுசம்: ஒற்றுமை
கேட்டை: உபாதைகள்


தனுசு
அரசாங்க தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கும், குடும்பத்தில் சுற்றத்தின் நண்பர்களின் வருகை, மனதில் உற்சாகம் ஏற்படும்.
மூலம்: அன்யோன்யம்
பூராடம்: தொடர்புகள்
உத்திராடம் 1ஆம் பாதம்: புத்துணர்ச்சி


மகரம்
பெண்களுடன் அனாவசிய பிரச்சினைகளை தவிர்க்கவும், நல்ல காரியங்களில் நம்பிக்கையுடன் ஈடுபடல், மனசோர்வுகள் ஏற்படும்.
உத்திராடம் 2, 3, 4: தொல்லைகள்
திருவோணம்: தடை
அவிட்டம் 1, 2: இறை நம்பிக்கை


கும்பம்
நண்பர்களின் உதவிகள் கிடைக்கும், குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும், தொழில் ஸ்தானத்தில் சக உழியர்களுடன் ஒன்றிணைந்து செயல்படல்.
அவிட்டம் 3, 4: இன்பம்
சதயம்: நன்மை
பூரட்டாதி 1, 2, 3: ஆதாயம்


மீனம்
அலைச்சல்கள் சற்று அதிகரிக்கும், புதிய காரியங்கள் தாமதத்தை ஏற்படுத்தும், சரும உபாதைகள் வந்து நீங்கும்.
பூரட்டாதி 4: காலதாமதம்
உத்திரட்டாதி: நலன் பாதிப்பு
ரேவதி: களைப்பு


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .