2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இன்றைய பலன்கள் (20.02.2013)

A.P.Mathan   / 2013 பெப்ரவரி 19 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}



இன்றைய பலன்கள் (20.02.2013)

மேடம்
சரியான சந்தர்ப்பத்தில் உதவிகள் கிடைக்காமல் அவதிப்படுவீர்கள். மற்றவர்கள்  உதவியை  நம்பி  எந்த செயலிலும் இறங்க வேண்டாம். குடும்ப விஷயங்களை யாரிடமும் சொல்லாமல் இருப்பது நல்லது.
அஸ்வினி : பிரயாணம்
பரணி : பயம்
கிருத்திகை 1ஆம் பாதம்: லாபம்


இடபம்
இல்லத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் வேண்டும். பண விடயங்களில் யாரையும் நம்ப வேண்டாம். ஆரோக்கிய விடயத்தில் கவனம் தேவை.
கிருத்திகை 2, 3, 4: கஷ்டம்
ரோகிணி: துன்பம்
மிருகசீரிடம் 1, 2: துக்கம்


மிதுனம்
உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும். மனதில் குழப்பங்கள் தோன்றி மறையும்  துக்கமான சூழல் உருவாகும்.
மிருகசீரிடம் 2, 3: துன்பம்
திருவாதிரை: கஷ்டம்
புனர்பூசம்: துக்கம்


கடகம்
நண்பர்களிடம் அளவோடு பழகுவது நல்லது. ஏற்றுமதி, இறக்குமதி செய்வோர் பெருத்த லாபம் பெற்று மனம் மகிழச்சியடையலாம். தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது.
புனர்பூசம்: மகிழ்ச்சி
பூசம் : பணலாபம்
ஆயில்யம்: விருத்தி


சிம்மம்
மேலதிகாரிகளுடனும் எதிரிகளுடனும் மிக கவனமாக நடந்து கொள்ளுதல் வேண்டும். நீண்ட தூர பயணம் மேற்கொள்வீர்கள். எதிர்பாராத திடீர் செலவுகள் உண்டாகும்.
மகம்: பிரச்சினை
பூரம்: செலவு
உத்திரம் 1ஆம் பாதம்: துக்கம்


கன்னி
கலைஞர்களுக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கும். அறிமுகம் இல்லாதவர்கள் தங்களுக்கு உதவுவர். நவண்மையான ஆடை அணிதல் நல்ல காரியங்கள் செய்வதற்கு வழிகிடைத்தல் மனதில் உற்சாகம் பிறக்கும்.
உத்திரம் 2, 3, 4: மகிழ்ச்சி
அஸ்தம்: லாபம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: மகிழ்ச்சி


துலாம்
இல்லத்தில் உள்ள பெண்கள் பெரியவர்களுடன் விவாதங்களைத் தவிர்க்கவும்.  வியாபாரிகள் கடினமாக உழகை;க வேண்டி இருக்கும். யாரையும் நம்பி  ஏமாற வேண்டாம்.
சித்திரை 3, 4ஆம் பாதம் : துன்பம்
சுவாதி: துக்கம்
விசாகம் 1, 2, 3: கஷ்டம்


விருட்சிகம்
நீங்கள் விரும்பிய பொருட்கள் உங்களுக்கு பரிசாக கிடைக்கும். பணியாளர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். நீண்ட நாளைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
விசாகம் 4: மகிழ்ச்சி
அனுசம்: லாபம்
கேட்டை: இன்பம்


தனுசு
குலதெய்வ வழிபாடுகளில் கலந்து கொள்வீர்கள். மன பயம் நீங்கி மனோ பலம் அதிகரிக்கும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். வெற்றிகள் கிடைக்கப்பெறுவீர்கள். 
மூலம்: லாபம்
பூராடம் : மகிழ்ச்சி
உத்திராடம் 1ஆம் பாதம்: வெற்றி


மகரம்
இல்லத்தில் உள்ளவர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். உடல் நலம் நன்றாக இருக்கும். தொழிலாளர்கள் பெருத்த லாபம் பெற்று மகிழ்ச்சியடைவீர்கள்.  
உத்திராடம் 2, 3, 4: மகிழ்ச்சி
திருவோணம்: மகிழ்ச்சி
அவிட்டம் 1, 2: இன்பம்


கும்பம்
பெண்களுக்கு நல்ல வரன் அமைந்து வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வரலாற்று சிறப்பு மிக்க இடங்களுக்கு சென்று வருவீர்கள். பிற இன மக்கள் தங்களுக்கு உதவுவார்கள்.
அவிட்டம் 3, 4: இன்பம்
சதயம் : மகிழ்ச்சி
பூரட்டாதி 1, 2, 3: லாபம்


மீனம்
வியாபாரத்தில் மேலதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். பங்குச் சந்தை லாபம் தரும். கணவன் மனைவி உறவு சுமூகமாக செல்லும்.
பூரட்டாதி 4: லாபம்
உத்திரட்டாதி : லாபம்
ரேவதி : மகிழ்ச்சி

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .