2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இன்றைய பலன்கள் (24.07.2013)

A.P.Mathan   / 2013 ஜூலை 23 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}



இன்றைய பலன்கள் (24.07.2013)
 
மேடம்
உணவு விடயத்தில் கட்டுப்பாடு தேவை. இல்லையெனில் அவதிப்பட வேண்டி இருக்கும். செலவு கட்டுக்கடங்காமல் போகும். சிக்கனம் தேவை. வாடிக்கையாளர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும்.
அஸ்வினி : துன்பம்
பரணி : கஷ்டம்
கிருத்திகை 1ஆம் பாதம்: வெறுப்பு
 
 
இடபம்
விழிப்புணர்வுடன் செயல்படுவதால் இழப்பைத் தவிர்க்கலாம். உடல் நலக்குறைவு இருந்தாலும் ஓரளவு நிலைமையை சமாளித்து விடுவீர்கள். வெளியூர் பயணங்கள் அலைச்சல் உடையதாய் இருக்கும்.
கிருத்திகை 2, 3, 4: துன்பம்
ரோகிணி : பயம்
மிருகசீரிடம் 1, 2: துக்கம்
 
 
மிதுனம்
உடல் அசௌகர்யத்தால் மருத்துவரின் ஆலோசனைகள் தேவைப்படும். சுப நிகழ்ச்சிகள் நடத்துவதில் இடையூறுகள் உண்டாகும். புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது.
மிருகசீரிடம் 2, 3: சிரமம்
திருவாதிரை: துன்பம்
புனர்பூசம்: பயம்
 
 
கடகம்
கையில் பணப் புழக்கம் அதிகரிக்கும். காரியத்தில் சாதனை அடைதல். வெளிநாட்டில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். உயர் அதிகாரிகளை சந்தித்து பேட்டி காணும் சூழ்நிலைகள் உருவாகலாம்.
புனர்பூசம்: பேட்டி
பூசம் : சாதனை
ஆயில்யம் : மகிழ்ச்சி
 
 
சிம்மம்
தீய நட்பினால் தேவையில்லாத நஷ்டங்கள் உண்டாகும். குடும்பத்தில் சிலவிதமான சிக்கல்கள் ஏற்படும். வியாபாரத்தில் முயற்சிகள் தடைப்படும்.
மகம்: துன்பம்
பூரம்: கஷ்டம்
உத்திரம் 1ஆம் பாதம்: சிக்கல்கள்
 
 
கன்னி
வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் வரும். பணத் தட்டுப்பாடு ஏற்படும். இதனால்  வியாபாரத்தில் அலைச்சல் உண்டாகும்.
உத்திரம் 2, 3, 4: மகிழ்ச்சி
அஸ்தம்: கஷ்டம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: அலைச்சல்
 
 
துலாம்
மனம் சஞ்சலமடையும். இல்லத்தில் திருட்டு பயம் உண்டாகும். எனவே கவனத்துடன் இருப்பது அவசியமாகும். இதனால் வீணான சிரமங்கள் ஏற்படும்.
சித்திரை 3, 4ஆம் பாதம் : சிரமம்
சுவாதி : பயம்
விசாகம் 1, 2, 3: குழப்பம்
 
 
விருட்சிகம்
வெளிநாட்டில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். பணிபுரியும் இடத்தில் காரியங்களில் வெற்றி உண்டாகும். உயர் அதிகாரிகளை சந்தித்து பேட்டிகள் கிடைக்கும்.
விசாகம் 4: பேட்டி
அனுசம்: வெற்றி
கேட்டை: மகிழ்ச்சி
 
 
தனுசு
எதிலும் ஜாக்கிரதையாக இருப்பது அவசியமாகும். வீணான அலைச்சல் காணப்படும். வேண்டாத பேச்சுகளால் மனசங்கடங்கள் உருவாகும். நிதானத்தை கடைப்பிடிப்பது அவசியமாகும்.
மூலம்: துக்கம்
பூராடம்: கஷ்டம்
உத்திராடம் 1ஆம் பாதம்: துன்பம்
 
 
மகரம்
வெளியூரிலிருந்து செய்திகள் வரும், இதனால் அலைச்சல்கள் காணப்படும். பணத்திற்கு தட்டுப்பாடுகள் காணப்படும். ஒருசில இடங்களில் வெற்றிகள் கிடைக்கும்.
உத்திராடம் 2, 3, 4: மகிழ்ச்சி
திருவோணம்: கஷ்டம்
அவிட்டம் 1, 2: வெற்றி
 
 
கும்பம்
முயற்சியில் தோல்வி உண்டாகலாம். வீண் அலைச்சல்கள் மற்றும் துக்கம் காணப்படும். செய்யும் செயல்களில் தவறுகள் காணப்படும்.
அவிட்டம் 3, 4: தோல்வி
சதயம் : துக்கம்
பூரட்டாதி 1, 2, 3: அலைச்சல்
 
 
மீனம்
புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவேறும். தனித்தன்மையுடன் செயல்பட்டு லாபத்தை அதிகரிப்பீர்கள். குடும்ப முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு பாடுபடுவர்.
பூரட்டாதி 4: இன்பம்
உத்திரட்டாதி : லாபம்
ரேவதி: மகிழ்ச்சி

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X