2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இன்றைய பலன்கள் (29.12.2012)

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 28 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}



இன்றைய பலன்கள் (29.12.2012)

மேடம்
தொலைதூரப் பிரயாணங்களில் ஈடுபடுவீர்கள். நண்பர்களால் புதிய வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து மனதை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.  
அஸ்வினி : இன்பம்
பரணி : மகிழ்ச்சி
கிருத்திகை 1ஆம் பாதம் : லாபம்


இடபம்
வியாபாரத்தில் சிலவிதமான சிக்கல்கள் உண்டாகும். புதிய நபர்களிடம் எச்சரிக்கையுடன் பழுகுவது நல்லது. காரியங்கள் தடைப்படுதல், பகை உண்டாகும்.
கிருத்திகை 2, 3, 4: சிக்கல்கள்
ரோகிணி: கஷ்டம்
மிருகசீரிடம் 1, 2: பகை


மிதுனம்
காரியங்கள் தாமதமானாலும் இறுதியில் அவை தங்களுக்கு சாதகமாக அமையும். பணம் கைக்கு வந்து மனதை மகழ்ச்சியில் ஆழ்த்தும். இல்லத்தில் மகிழ்ச்சி நிலவும்.
மிருகசீரிடம் 2, 3: மகிழ்ச்சி
திருவாதிரை: உற்சாகம்
புனர்பூசம்: இன்பம்


கடகம்
வேலை நெருக்கடியால் உடல் நலம் பாதிக்கப்படும். பண விடயங்களில் யாரையும் நம்ப வேண்டாம். ஆலயங்களுக்கு சென்று வருவீர்கள்.
புனர்பூசம்: துன்பம்
பூசம்: துக்கம்
ஆயில்யம்: மகிழ்ச்சி


சிம்மம்
புதிய முயற்சிகள் லாபகரமாக அமையும். பொழுதுபோக்குகளில் ஈடுபடும்பொழுது கவனம் தேவை. பணம் தேவைக்கேற்ப வரும்.
மகம்: முயற்சி
பூரம்: லாபம்
உத்திரம் 1ஆம் பாதம்: கவனம்


கன்னி
பணம் தேவைக்கேற்ப வரும். பெண்களுக்கு தன்னம்பிக்கையும் மனதைரியமும் மிகும். வெளியூர் பயணங்கள் அதிகம் உண்டாகும். 
உத்திரம் 2, 3, 4: லாபம்
அஸ்தம்: மகிழ்ச்சி
சித்திரை 1, 2ஆம் பாதம்: அலைச்சல்


துலாம்
இல்லத்தில் இளைய சகோதரர்களின் வரவினால் ஆதாயம் கிடைக்கும். நீண்ட தூர பயணம் மேற்கொள்வது நல்லது. பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவது நல்லது.
சித்திரை 3, 4ஆம் பாதம்: மகிழ்;ச்சி
சுவாதி: இன்பம்
விசாகம் 1, 2, 3: மகிழ்ச்சி


விருட்சிகம்
பெண்களுடன் வீணான விவாதங்கள் ஏற்படும். யாரையும் நம்பி ஏமாற வேண்டாம். சில புதிய தொழில் தொடங்க ஏதுவான நாள்.
விசாகம் 4: விவாதம்
அனுசம்: தரிசனம்
கேட்டை: லாபம்


தனுசு
இடமாற்ற முயற்சிகள் வெற்றி தரும். வியாபாரிகளுக்கு ஓர்டர்கள் அதிகம் கிடைக்கும். பெண்களுக்கு மகிழ்ச்சியான சுப செய்திகள் வந்து சேரும்.
மூலம்: மகிழ்ச்சி
பூராடம் : இன்பம்
உத்திராடம் 1ஆம் பாதம்: லாபம்


மகரம்
மேலதிகாரிகளுடனும் எதிரிகளுடனும் பகையை வளர்த்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது. பெண்களுக்கு வயிறு சம்மந்தமான பிரச்சினைகள் உண்டாகும். பிரபலங்களின் சந்திப்புகள் கிடைக்கும்.
உத்திராடம் 2, 3, 4: பிரச்சினை
திருவோணம்: சந்திப்பு
அவிட்டம் 1, 2: துன்பம்


கும்பம்
வியாபாரிகளுக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் போட்டி, பொறாமைகள் அதிகரித்தாலும் அதில் வெற்றி பெறுவீர்கள். சுப செலவுகள் உண்டாகும்.
அவிட்டம் 3, 4: லாபம்
சதயம் : இன்பம்
பூரட்டாதி 1, 2, 3: வெற்றி



மீனம்
நீண்ட நாளைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். மற்றவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூக உறவுகள் தென்படும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
பூரட்டாதி 4: இன்பம்
உத்திரட்டாதி : லாபம்
ரேவதி : மகிழ்ச்சி

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X