2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘அமெரிக்காவுக்குப் பெரிய பரிசுப் பொதி’

Editorial   / 2017 மே 30 , பி.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவுக்காவிலிருந்து, வடகொரியாவைப் பாதுகாத்துக் கொள்வதற்கான நேர அட்டவணையின் படி, மிகவும் சக்திவாய்ந்த ஆயுதங்களை, பல்வேறு கட்டங்களில் வடகொரியா தயாரிக்கும் என வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன் தெரிவித்துள்ளாரென,  வடகொரியாவின் உத்தியோகபூர்வ செய்தி முகவரகமான கே.சி.என்.ஏ, நேற்று கூறியுள்ளது.   

அந்தவகையில், அமெரிக்க இராணுவத்தின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைக்குப் பதிலடியாக, ஐக்கிய அமெரிக்கர்களுக்கு, மிகப்பெரிய பரிசுப் பொதியொன்றை அனுப்பும் நடவடிக்கையில், மிகப்பெரும் பாய்ச்சலொன்றை நிகழ்த்தியுள்ளதாக, தலைவர் கிம் தெரிவித்ததாக,
கே.சி.என்.ஏ கூறியுள்ளது.   

இதேவேளை, துல்லியமான வழிகாட்டும் அமைப்பொன்றின் மூலம் கட்டுப்படுத்தப்பட்ட புதிய ஏவுகணைச் சோதனையொன்றை தலைவர் கிம் மேற்பார்வையிட்டதாகவும், மேலும் சக்திவாய்ந்த மூலோபாய ஆயுதங்களைத் தயாரிக்க உத்தரவிட்டுள்ளதாகவும், கே.சி.என்.ஏ கூறியுள்ளது.   

நேற்று  (29) ஏவப்பட்ட ஏவுகணையானது, முன்னைய ஹுவசொங் றொக்கெட்டுகளுடன் ஒப்பிடும்போது, மேம்படுத்தப்பட்ட தன்னியக்க ஏவுதலுக்கு முன்பான வரிசையைக் கொண்டிருந்ததாக,
 

கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது. தனது ஸ்கட் வகையான ஏவுகணைகளை, ஹுவசொங் என்றே வடகொரியா அழைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.   

இந்நிலையில், ஐக்கிய அமெரிக்காவின் சுப்பர்சொனிக் பி-1பி லான்சர் குண்டு போடும் விமானமொன்றுடன் இணைந்த ஒத்திகை நடவடிக்கையொன்றை, நேற்று மேற்கொண்டதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. கொரியத் தீபகற்பத்தில் அணுகுண்டைப் போடுவதற்கு பயிற்சி பெறுமுகமாக, ஒத்திகையொன்றை ஐக்கிய அமெரிக்கா நடாத்துகின்றது என, கே.சி.என்,ஏ முன்னர் குற்றஞ்சாட்டியுள்ளது.   

இதேவேளை, யு.எஸ்.எஸ் கார்ல் வின்சனினால் தலைமை தாங்கப்படும் விமானந்தாங்கித் தாக்குதல் குழு, இன்னோர் அணுசக்தி விமானந்தாங்கிக் கப்பலான றொனால்ட் றீகனுடன் இணைந்து, கொரியத் தீபகற்பத்துக்கு அருகிலுள்ள நீர்ப்பகுதியில், ஒத்திகையொன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக, ஐக்கிய அமெரிக்கக் கடற்படை தெரிவித்துள்ளது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X