2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அமெரிக்க இராணுவ, இராஜதந்திர குடும்பங்கள் துருக்கியிலிருந்து வெளியேறுங்கள்

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 30 , மு.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்பு அச்சம் காரணமாக, தெற்கு துருக்கியிலிருந்து, ஐக்கிய அமெரிக்க இராஜதந்திரிகளினதும் இராணுவப் பணியாளர்களினதும் குடும்பங்களை வெளியேறுமாறு ஐக்கிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களமும் பென்டகனும் கடந்த செவ்வாய்க்கிழமை (29) உத்தரவிட்டுள்ளது.

துருக்கி முழுவதும் நிலவும் அச்சம், தாக்குதலுக்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ள நிலையில், ஐக்கிய அமெரிக்க பிரஜைகளுக்கு வழங்கப்பட்டுள்ள இற்றைப்படுத்தப்பட்டுள்ள பயண எச்சரிக்கைகளுக்கு மத்தியிலேயே மேற்படி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அடனாவில் உள்ள ஐக்கிய அமெரிக்க தூதரகம், இன்சிரிலிங் வான் தளம், ஏனைய இரண்டு இடங்களில் பணியாற்றும் ஐக்கிய அமெரிக்கப் பணியாளர்களை தங்கியிருப்போரே கட்டாயம் வெளியேற வேண்டும் என ஐக்கிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களமும் பென்டகனும் கூறியிருந்தன.

இந்த அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில், இன்று, நாளை இடம்பெறவுள்ள அணுப் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக துருக்கி ஜனாதிபதி தயீப் எர்டோகான் கடந்த செவ்வாய்க்கிழமை (29) வொஷிங்டனுக்கு பயணமாகியிருந்தார்.

சிரியா, துருக்கியின் உள்நாட்டு கொள்கையின் போக்குத் தொடர்பில் ஐக்கிய அமெரிக்காவுக்கும் துருக்கிக்குமிடையே மோசமான உறவுகள் நிலவும் சமயத்தில், எர்டோகானுடன் ஒபாமா சந்திப்பாரா என்ற பலத்த சந்தேகம் காணப்படுகையில், விமான நிலையத்தின் வைத்து கருத்து தெரிவித்த எர்டோகான், ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதியுடன் இரு தரப்புப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்தார். இந்நிலையில், ஒபாமாவும் எர்டோகானும் உத்தியோகப்பற்றற்ற முறையில் கலந்துரையாடல்களை மேற்கொள்வர் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .