2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவ விமானம் வீழ்ந்ததில் 11 பேர் பலி

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 02 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவத்தின் போக்குவரத்து வானூர்தி வீழ்ந்ததில் பதினொரு பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்க இராணுவத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆறு அமெரிக்க இராணுவ சேவை அங்கத்தவர்களும், அமெரிக்க தலைமையிலான சர்வதேசப் படையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஐந்து பொதுமக்களுமே கொல்லப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம், உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை ஜலலாபாத் விமானநிலையத்திலேயே இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

சம்பவம் இடம்பெற்ற சமயம் எதிரியால் தாக்கப்பட்டதாக எதுவித அறிக்கைகளும் இல்லையெனவும், விசாரணை இடம்பெறுவதாகவும் இராணுவ பேச்சாளர் தெரிவித்தபோதும், தாங்களே வானூர்தியை சுட்டு வீழ்த்தியதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

மேற்படி ஹெர்குலஸ் சி-130 போக்குவரத்து விமானமானது, துருப்புக்ளை நெருக்கடியான பிரதேசங்களில் காவிச் சென்று தரையிறங்கவே அமெரிக்க இராணுவத்தால் பெரும்பாலும் பயன்படுகிறது.

விமானம் வீழ்ந்த ஜலலாபாத், பாகிஸ்தான் எல்லைக்கருகில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .