2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இத்தாலியின் புதிய பிரதமராக ஜென்டிலோனி பெயரிடப்பட்டார்

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 12 , மு.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியின் புதிய பிரதமராக பாலோ ஜென்டிலோனி, நேற்று (11) பெயரிடப்பட்டார். அரசியலமைப்பு மாற்றங்கள் தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பில் தோல்வியடைந்தமையைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமரான மட்டயோ றென்ஸி இராஜினாமாச் செய்திருந்தார். இதைத் தொடர்ந்தே, ஜென்டிலோனி பிரதமராக தற்போது பெயரிடப்பட்டுள்ளார்.

றென்ஸியின் கீழ் வெளிநாட்டமைச்சராகப் பணியாற்றி ஜென்டிலோனியை, புதிய மத்திய இடதுசாரி அரசாங்கத்தை அமைத்து, 2018ஆம் பெப்ரவரி மாத தேர்தல்களுக்கு இத்தாலியைக் கொண்டு செல்லுமாறு, ஜனாதிபதி சேர்ஜியூ மட்டரெல்லா கோரியிருந்தார்.

தேசிய ஒன்றிணைந்த அரசாங்கம் தொடர்பான அணுகல்களை எதிர்க்கட்சிகள் நிராகரித்தமையைத் தொடர்ந்தே, ஜென்டிலோலோனியின் பக்கம் ஜனாதிபதிபதி திரும்பியிருந்தார். இது தவிர, எதிர்க்கட்சிகளின் உடனடித் தேர்தல் கோரிக்கைகளையும் ஜனாதிபதி நிராகரித்திருந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .