2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இஸ்ரேலியக் குடியிருப்புகளை விமர்சிக்கிறார் ஜோ பைடன்

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 21 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க உப ஜனாதிபதி ஜோ பைடன், இஸ்ரேலால் மேற்கொள்ளப்பட்டுவரும் குடியிருப்பு விஸ்தரிப்புகளை விமர்சித்துள்ளதோடு, சமாதானத்தை ஏற்படுத்துவதில் அவை தடையாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுக்குச் சார்பான குழுவான அமெரிக்க இஸ்ரேல் பொது விவகாரக் குழுவில் உரையாற்றியபோதே, இக்கருத்தை அவர் வெளியிட்டார்.

'இஸ்ரேலிய அரசாங்கத்தின் உறுதியானதும் கட்டமைப்புரீதியானதுமான குடியிருப்புகளை விஸ்தரித்தல், வெளிக்காவல் நிலையங்களை சட்டரீதியாக்குதல், நிலங்களைக் கைப்பற்றுதல் ஆகியன, இரண்டு தேசங்களைக் கொண்ட தீர்வுக்குத் தடையாக உள்ளன" என அவர் தெரிவித்தார்.

பலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்குமிடையிலான முரண்பாட்டை தீர்ப்பதில், குடியிருப்புகளின் விஸ்தரிப்பு, எந்தவொரு தாக்கத்தையும் செலுத்தமாட்டா என இஸ்ரேல் நம்புகின்ற போதிலும், தான் அவ்வாறு நம்பவில்லை என, ஜோ பைடன் தெரிவித்தார்.

'காத்திரமான அரசியல் தீர்வுகளை நோக்கிச் செல்வதற்கு, இஸ்ரேலியர்களிடமோ அல்லது பலஸ்தீனர்களிடமோ, தற்போது உண்மையான எண்ணம் இல்லை. அது, மிகவும் ஏமாற்றம் தருகிறது" என அவர் தெரிவித்தார்.

இதன்போது, இஸ்ரேல் மீதே அவரது அதிகபட்ச விமர்சனம் காணப்பட்ட போதிலும், இஸ்ரேலை மட்டந்தட்டும் நடவடிக்கையில், ஐக்கிய நாடுகள் சபையில் பலஸ்தீனம் ஈடுபடுகிறது என, ஜோ பைடன் குறிப்பிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .