2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியானார் ட்ரம்ப்

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 20 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் வாக்காளர் குழுப் பிரதிநிதிகள் வாக்கெடுப்பிலும் வென்ற குடியரசுக் கட்சியின் டொனால்ட் ட்ரம்ப், ஐக்கிய அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக உத்தியோகபூர்வமாக நேற்று (19) தெரிவானார்.

ஜனாதிபதியாகுவாதற்குத் தேவையான 270 வாக்காளர் குழுப் பிரதிநிதிகளை விட அதிகமான பிரதிநிதிகளை ட்ரம்ப் பெற்றிருந்தபோதும், குறைந்தது ஆறு வரையான பிரதிநிதிகள் வழமையை மாற்றி, தங்களது மாநிலங்களில் கிடைத்த முடிவுக்கெதிராக வாக்களித்திருந்தனர். 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலத்தில், ஆகக்கூடிய “நம்பிக்கையற்ற பிரதிநிதிகள்” இருந்தமை இந்தத் தடவையேயாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்காளர் குழுப் பிரதிநிகளின் வாக்கெடுப்பானது வழமையாக சம்பிரதாயபூர்வமானதொன்று என்றபோதும், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளின்டனுக்கு வாக்களிக்குமாறு குடியரசுக் கட்சியின் பிரதிநிதிகளை ஜனநாயகக் கட்சி செயற்பாட்டாளர்கள் கோரியிருந்த நிலையிலேயே  மேற்படி வாக்கெடுப்பு முக்கியத்துவம் பெற்றிருந்தது.

எவ்வாறெனினும் இறுதியில், குறைந்தது நான்கு ஜனநாயகக் கட்சிப் பிரதிநிதிகளாவது கிளின்டனுக்கு வாக்களிக்காமல் வேறு யாருக்கும் வாக்களித்திருந்தனர். ட்ரம்ப்புக்கு ஆதரவாக, குடியரசுக் கட்சியின் இரண்டு பிரதிநிதிகள் வாக்களித்திருக்கவில்லை.

ஏறத்தாழ அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய அமெரிக்கா முழுவதுமுள்ள 538 பிரதிநிதிகளில், 304 பிரதிநிதிகளின் வாக்குகளை ட்ரம்ப் பெற்றதோடு, 227 பிரதிநிதிகளின் வாக்குகளை கிளின்டன் பெற்றிருந்தார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .