2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

ஏவுகணைகளை ஏவியது வடகொரியா

Editorial   / 2017 ஜூன் 08 , பி.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

தரையிலிருந்து கப்பலைத் தாக்கும் ஏவுகணைகள் என்று தோன்றுகின்ற சில ஏவுகணைகளை, தனது கிழக்குக் கரையோரத்திலிருந்து வடகொரியா, இன்று (08) ஏவியதாக, தென்கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.  

வடகொரியாவிலிருந்தான தாக்குதலைத் தடுக்கும் பொருட்டான, ஐக்கிய அமெரிக்காவின் ஏவுகணைக்கெதிரான அமைப்பான தாட்-இன் முழுமையான தரையிறக்கத்தை, நேற்று  (07), தென்கொரியா தள்ளி வைத்துள்ள நிலையிலேயே, ஏவுகணைகளை வடகொரியா ஏவியுள்ளது.   

தென்கொரியா, சீனா ஆகிய நாடுகளுக்கிடையிலான பதற்றம் தணியும் அறிகுறிகளுக்கு மத்தியில், வடகொரியாவின் பிரதான நட்பு நாடான சீனாவைக் கோபத்துக்குள்ளாக்கிய தாட்-இன் எஞ்சியுள்ள பாகங்களை நிறுவுவதை இடைநிறுத்துவதாக, நேற்று முன்தினம் தென்கொரியா தெரிவித்திருந்தது.    

இந்நிலையிலேயே, வடகொரியாவின் கரையோர நகரான வொன்சானிலிருந்து, நேற்றுக் காலையில் ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும், 200 கிலோமீற்றரளவில் சென்றதாகவும், தென்கொரிய பணியாட் தொகுதியின் இணைத் தலைவர் அலுவலகம், அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.  

இந்தச் சந்தர்ப்பத்தில், வடகொரியா அண்மையில் சோதித்த வெவ்வேறு வகையான ஏவுகணைகளுடன் ஒப்பிடுகையில், நேற்றுச் சோதிக்கப்பட்ட ஏவுகணை, தற்காப்பை, எதிரிப் போர்க்கப்பல்களின் மூலமான ஆபத்தை எதிர்நோக்கும் பொருட்டு வடிவமைக்கப்பட்ட ஏவுகணையாகக் காணப்பட்டிருந்தது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .